ராட்சச மாமனே பாடல் மேக்கிங் வீடியோ.. மணிரத்னம் கிட்ட மாட்டிக்கொண்ட கார்த்தி!

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் 3வது பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகின.

ஆனால் இந்தப் பாடல் சமூக வலைதளத்திலேயே வெளியானது. இந்தப்பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.

 பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் வரலாற்றுக் காவியம். இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த பாகம் அடுத்த 9 மாதங்களில் ரிலீசாகும் என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

வரலாற்று நாயகர்கள்

வரலாற்று நாயகர்கள்

படத்தில் வரலாற்று நாயகர்களாக வலம் வரும் ஜெயம் ரவி உள்ளிட்டோர், கேரக்டர்களாகவே நிஜத்திலும் மாறி, தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தங்களது கேரக்டர்களின் பெயர்களை வைத்துள்ளனர். மேலும் படத்தின் பிரமோஷன் டூரையும் தற்போது நடத்தி வருகின்றனர்.

பிரமோஷனல் டூர்

பிரமோஷனல் டூர்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ப்ரமோஷனல் டூர் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து, தஞ்சாவூர், கேரளா, பெங்களூரு, டெல்லி என தொடரவுள்ள இவர்களது பயணம், துபாயில் நிறைவடையவுள்ளது. படம் சர்வதேச அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

 பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

இந்தியாவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ள நிலையில், அந்த மாநிலங்களில் எல்லாம் படக்குழுவினர் தங்களது டூரை தொடரவுள்ளனர். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

ராட்சச மாமனே பாடல்

ராட்சச மாமனே பாடல்

முன்னதாக இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், 2 பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டு வெளியானது. ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தில் 6 பாடல்கள் உள்ள நிலையில் படத்தின் ராட்சச மாமனே என்ற மூன்றாவது பாடலும் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் பாடலில் பரதநாட்டியம் மற்றும் கதக் நடனங்களை சேர்த்துள்ளதாக நடன இயக்குநர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

மேக்கிங் வீடியோ

மேக்கிங் வீடியோ

இந்நிலையில் ராட்சச மாமனே பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் தற்போது கார்த்தி பேசியுள்ளார். இந்தப் பாடலின் ஒரு காட்சியில் மூன்று டேக்காக நடிக்க பிருந்தா தன்னிடம் அறிவுறுத்திய நிலையில், மறுநாள் வந்த மணிரத்னம், ஒரே டேக்கில் மேலிருந்து கீழ் வருமாறு கூறியதாகவும், இதனால் தான் முழி பிதுங்கியதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X