பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது ... மணி ரத்னத்தின் மாஸ்டர் பிளான் இது தான்
சென்னை : டைரக்டர் மணி ரத்னத்தின் நீண்ட கால கனவு படமான பொன்னியின் செல்வன் சூட்டிங் 2019 இறுதியில் துவங்கியது. படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்து வனப்பகுதிகளில் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோரை வைத்து எடுக்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது சூட்டிங்கிற்கு அரசு அனுமதி அளித்ததும் கடந்த 2 மாதங்களாக இடைவிடாது சூட்டிங் நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்தில் தொடரும் சூட்டிங் :
ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், நிழல்கள் ரவி உள்ளிட்டோரை வைத்து படம் எடுக்கப்பட்டது. சில வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூட்டிங் துவங்கப்பட உள்ளது. அப்போது விக்ரமும் இதில் இணைய உள்ளார்.

ரிலீஸ் எப்போது
இந்நிலையில் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் கூறிய தகவலின்படி, பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன் முடிக்க மணி ரத்னம் முடிவு செய்துள்ளார். 2022 கோடை விடுமுறைக்கு முன் படத்தை ரிலீஸ் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆர்வத்தை தூண்டும் க்ளைமேக்ஸ்
அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 2 ம் பாகத்தையும் ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். முதல் பாகத்தின் க்ளைமேக்ஸ், ரசிகர்களிடம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளார்.

காஸ்ட்லி தமிழ் படம்
இதனால் ரசிகர்களை நீண்ட காலம் காக்க வைக்காமல் அந்த ஆண்டு டிசம்பரிலேயே விரைவாக ரிலீஸ் செய்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்க உள்ளது. தமிழ் சினிமாவிலேயே காஸ்ட்லி படமான இதனை லைகா புரொடெக்ஷன்ஸ் வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications











