ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு… விறுவிறுப்பான இறுதிகட்ட காட்சிகள் !

சென்னை : பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த படப்பிடிப்பை அடுத்து பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

வரலாற்று நாவல்

வரலாற்று நாவல்

வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இது இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சரத்குமார்,நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம்,ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா,ஷோபிதா துலிபலா, என ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

நடிகர் நடிகையர் விவரம்

நடிகர் நடிகையர் விவரம்

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், சுந்தர சோழனாக சரத்குமாரும், வந்தியத் தேவனாக கார்த்தியும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வைணவ சாமியாரின் வேடத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராமும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி கதாபாத்திரத்திலும், த்ரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் இணைந்தார்

படப்பிடிப்பில் இணைந்தார்

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு, நிலைமை சீராகி பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்தார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளது. அங்கு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

இசை

இசை

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X