ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா

சென்னை : ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு பாகங்களாக இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், இரண்டின் வேலைகளும் ஒரே சமயத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜெய்பூரில் பொன்னியின் செல்வன்

ஜெய்பூரில் பொன்னியின் செல்வன்

தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் நடக்க உள்ளது. பொன்னியின் செல்வன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. ஏற்கனவே சில சண்டை காட்சிகள் இந்தோனேஷிய காடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத சூட்டிங்

ஒரு மாத சூட்டிங்

ஜெய்பூரில் ஒரு மாதம் காலம் படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதால் ஒட்டுமொத்த படக்குழுவும், ஜெய்பூர் செய்ய உள்ளது. ஜெய்பூர் மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் படமாக்கப்பட உள்ளது.

இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை

இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களின் சூட்டிங்கும் முடிந்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. சூட்டிங் முழுவதும் முடிந்த பிறகு மணிரத்னம், கிராபிக்ஸ் வேலைகளை துவக்க உள்ளார்.

ரூ.500 கோடி பட்ஜெட்

ரூ.500 கோடி பட்ஜெட்

குறுகிய இடைவெளியிலேயே இரண்டு பாகங்களையும் ரிலீஸ் செய்ய மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

முக்கிய வேடங்களுக்கு சிறப்பு பயிற்சி

முக்கிய வேடங்களுக்கு சிறப்பு பயிற்சி

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு குதிரையேற்றம், வாள் சண்டை உள்ளிட்ட பல பயிற்சிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X