Vijay - ஒரு படம் தயாரித்ததால் விஜய்யிடம் பிச்சையெல்லாம் எடுக்க முடியாது.. தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: Manickam Narayanan (மாணிக்கம் நாராயணன்) விஜய்யிடம் சென்று பிச்சையெல்லாம் எடுக்க முடியாது என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
ரமேஷ் அரவிந்த் நடிப்பில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான புதிய தென்றல் என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன். அதனையடுத்து கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், முன் தினம் பார்த்தேனே, வித்தகன் ஆகிய படங்களை தயாரித்தார்.

வேட்டையாடு விளையாடு: மாணிக்கம் நாராயணன் தயாரித்த படங்களில் தரமான படம் என்றால் அது வேட்டையாடு விளையாடு. கமல் ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அந்தப் படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது. சமீபத்தில் படத்தின் ரீ ரிலீஸின்போதுகூட கௌதம் மேனன், மாணிக்கம் நாராயணன், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கமலின் அக்கறை: மாணிக்கம் நாராயணன் தற்போது திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டாலும் யூட்யூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டியில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துவருகிறார். குறிப்பாக வேட்டையாடு விளையாடு படத்தின் அமெரிக்க ஷெட்யூலின்போது அங்கிருந்து மாணிக்கம் நாராயணனுக்கு ஃபோன் செய்த கமல் ஹாசன், உனது பணத்தை இங்கு வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக மாணிக்கம் நாராயணன் சொல்லி கமலுக்கு என் மீது அவ்வளவு அக்கறை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அஜித் Vs மாணிக்கம் நாராயணன்: அவர் அளிக்கும் பேட்டியில் தவறாமல் அஜித்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிடுவார். ஒரு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு அந்தப் படத்தில் அஜித் நடிக்க மறுத்துவிட்டார். அதேபோல் தன்னுடைய அப்பா, அம்மா ஊருக்கு போக பணம் இல்லாமல் திணறியபோது அஜித் என்னிடம் வந்துதான் பணம் வாங்கி சென்றார். அவர் மானஸ்தனாக இருந்தால் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவருகிறார்.
பணம் வேண்டும்: இந்நிலையில் மாணிக்கம் நாராயணன் விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விஜய்யை வைத்து நான் மாண்புமிகு மாணவன் படம் தயாரித்தேன். ஆனால் இப்போது அவரை வைத்து படம் தயாரிக்க வேண்டுமென்றால் கையில் பணத்தோடுதான் போய் பேச வேண்டும்.
பிச்சை எடுக்க முடியாது: ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஒருகாலத்தில் நான் அவருடைய படத்தை தயாரித்தேன் என்பதற்காக அவரிடம் இப்போது சென்று பிச்சை எல்லாம் எடுக்க முடியாது. அதற்கு எந்த அவசியமும் இல்லை. முக்கியமாக விஜய் என் மீது ரொம்பவே மரியாதை வைத்திருக்கிறார். அதை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை""என்றார்.


Click it and Unblock the Notifications











