குடும்பஸ்தனில் 'எமோஷனல் லாக்' ஆன மணிகண்டன்.. அட இந்த விஷயம் செம்மையா இருக்கேப்பா!
சென்னை: நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவின் பிராமிசிங் நடிகர். இவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றாலே அந்த படம் கதையாக நன்றாக இருக்கும். திருப்திகரமான படமாக அது இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார். இப்படி இருக்கும்போது குடும்பஸ்தன் படத்தில் அவர் எப்படி கமிட் ஆனார் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
அண்மையில் கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் குடும்பஸ்தன் குறித்து அவர் பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, இந்த படத்தின் கதை என்னிடத்தில் சொல்லும்போது நான் குட் நைட் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். முதலில் இந்த படத்தின் கதை நடிகர் அசோக் செல்வனுக்கு தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் தேதிகள் இல்லாததால், என்னை படத்தின் கதையைக் கேட்கச் சொன்னார். நான் படத்தின் கதையைக் கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மணிகண்டன்: குறிப்பாக, பொதுவாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்றால் யாருக்கும் அடங்காதவன், பணத்தை வீட்டுக்கு கொடுக்காதவன், நான்கு பேரை தூக்கி போட்டு அடிப்பவன் என அப்படித்தான் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் குடும்பஸ்தன் படத்தின் கதாசிரியர் பிரசன்னா கதையைச் சொன்னதும் எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. ஏன் இப்படியான கதாபாத்திரம் கதாநாயகனாக இருக்க கூடாதா? அவர்களது வாழ்க்கையில் சுவாரஸ்யங்களே இருக்காதா? இந்த கதாபாத்திரம் ஏன் கதாநாயகனாக இருக்க கூடாது என்ற கேள்வியே இந்த படத்தில் என்னை கமிட் ஆக்க வைத்துவிட்டது.
கல்யாண பத்திரிக்கை: குட் நைட் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பின்போது, குடும்பஸ்தன் படத்தின் மொத்த கதையையும் என்னிடத்தில் கொடுத்தது மட்டும் இல்லாமல், தனது கல்யாண பத்திரிக்கையையும் கொடுத்தார் ராஜேஸ்வர் காளிசாமி. இரண்டையும் கொடுத்துவிட்டு கதை பிடித்திருந்தால் கல்யாணத்துக்கு வாங்க எனக் கூறிவிட்டு சென்று விட்டார். முழுக்கதையையும் படித்துப் பார்த்தேன் எனக்கு கதை ரொம்ப பிடித்துப்போனது.

எமோஷனல் லாக்: ராஜேஷ்வர் காளிசாமி திருமணத்திற்கு சென்றுவிட்டேன்" எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டனை கமிட் செய்ய எழுத்தாளர் தனது கல்யாண பத்திரிக்கையோடு சென்று எமோஷனலாக லாக் செய்து விட்டாரே என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குடும்பஸ்தன் படம் இந்த ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப் படமாக விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உருவெடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











