யார் நடிக்கிறாங்க? 'அவள் அப்படித்தான்' என்ற பெயரில்.. சினிமாவாகும் கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை!

By

சென்னை: நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து அவள் அப்படித்தான் என்ற பெயரில் படம் உருவாகிறது.

1979ம் ஆண்டு வெளியான நடிகர் சிவக்குமாரின் வண்டிச்சக்கரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், சில்க் ஸ்மிதா.

தனது கவர்ச்சி நடிப்பால் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 1980 முதல் 1990 வரை சில்க் ஸ்மிதா இல்லாத படங்கள் குறைவு. அனைத்து மொழிகளில் அவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

போராட்டங்கள்

போராட்டங்கள்

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா, தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கை கதை பலர் அறியாதது. அவர் போராடி வென்று மரணமடைந்தது வரை பல கதைகள் இருக்கிறது அவர் பற்றி.

வித்யா பாலன்

வித்யா பாலன்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையைத் தழுவி பாலிவுட்டில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் சினிமா படம் உருவானது. இதில் வித்யா பாலன், சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்தார். இதில் நடித்ததற்காக நடிகை வித்யா பாலன் தேசிய விருது பெற்றார். மலையாளத்திலும் சில்க்கின் கதையை மையப்படுத்தி படங்கள் வெளியாகின.

அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்

இந்நிலையில் அவர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து மேலும் ஒரு படம் தயாரிக்கப் படுகிறது. இதற்கு 'அவள் அப்படித்தான்' என்ற டைட்டில் வைத்துள்ளனர். காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கே.எஸ்.மணிகண்டன்

கே.எஸ்.மணிகண்டன்

விளம்பரப் படங்களை இயக்கிய வரும், சந்தானம், சேது, பவர்ஸ்டார் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை இயக்கியவருமான கே.எஸ்.மணிகண்டன் இதை இயக்குகிறார். நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. பிரபல நடிகைகளிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்குகிறது.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil
காந்தக் கண்கள்

காந்தக் கண்கள்

இதுபற்றி இயக்குனர் மணிகண்டன் கூறும்போது, 'சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம், அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட கண்களுடைய அழகானப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்' என்றார். விரைவில் மற்ற விவரங்கள் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X