மணிகண்டனுக்கு அந்த ஹீரோயின் தான் பிடிக்குமாம்.. அடேங்கப்பா லிஸ்ட் பெரிசா இருக்கு!

சென்னை: குட்நைட், லவ்வர், குடும்பஸ்தன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நடிகர் மணிகண்டன் பல திறமைகளை வைத்திருக்கிறார் என ரசிகர்கள் வாயை பிளக்க தொடங்கியுள்ளனர். அசிஸ்டெண்ட் டைரக்டரா வாழ்க்கையை தொடங்கி இன்று இளம் இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மணிகண்டன் இருக்கிறார். இருந்தாலும் மணிகண்டன் நடிக்கும் படங்களில் தமிழ் நடிகைகளே இல்லை என்ற கேள்விக்கு மிக சாதுர்யமாக பதில் அளித்து தப்பித்து விட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் தோன்றிய மணிகண்டனுக்கு காலா படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தில் ரஜினிக்கு மகனாக லெனின் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவரது நடிப்பும் பாராட்டுக்களையும், விருதையும் வாங்கி தந்தது. பின்னர் குட்நைட் படத்தின் மூலம் லீட் ரோலில் மணிகண்டண் நடிக்க தொடங்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Manikandan interview manikandan telugu heroines

கமல் ரசிகன்: மணிகண்டன் கலந்துகொள்ளும் இண்டர்வியூவ் அல்லது இசை நிகழ்ச்சிகளில் ரஜினி, கமலை போன்று அச்சு அசலாக இமிடேட் செய்து காண்பித்து கைதட்டல்களை வாங்கி விடுவார். தற்சமயத்தில் அவர் பேசும் வீடியோக்கள் தான் இளைஞர்களுக்கு ஸ்ட்ரெஸ்பஸ்டராகவும் இருந்திருக்கிறது. என்னப்பா இந்த மணிகண்டனுக்கு இப்படியொரு திறமையா என்று வியந்து பார்க்கவும் செய்துள்ளார். கமல் ரசிகனாக இருந்துகொண்டு சினிமாவில் உள்ள அனைத்து விசயங்களையும் அறிந்து வைத்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

நல்ல பையன்: இதுவரை கிசுகிசு, நடிகைகளுடன் அதிக நேரம் அரட்டை. ஹிட் கொடுத்த பின்பும் பந்தா செய்யாமல் வரும் ஹீரோ என்றால் அது மணிகண்டன் தான் என்ற நற்பெயரை பெற்றிருக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு மட்டும் இல்லை, இயக்குநர்களின் குட் புக்கில் அவர் இருக்கிறார். ஹிட் கொடுத்த பின்பும் காரில் வராமல் பைக்கில் தான் வந்து செல்கிறார் என்றும் பாராட்டுகளை பெற்றார். ஆனால், மணிகண்டன் இப்படி செய்யலாமா என்பது தான் நெட்டிசன்களின் கேள்வி. அவர் நடித்த குட்நைட் படத்தில் மீதா ரகுநாத் தமிழ் நடிகை, ஆனால், லவ்வர், குடும்பஸ்தன் படங்களில் தெலுங்கு நடிகைகள் ஹீரோயினாக நடித்திருந்தனர்.

ல்ல கெமிஸ்ட்ரி: லவ்வர் படத்தில் தெலுங்கு பேசும் ஸ்ரீகவுரி ப்ரியா மணிகண்டனுக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படத்தில் இருவருக்குமே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. டாக்ஸிக் காதலை மையப்படுத்தி உருவான கதையில் மணிகண்டன் அற்புதமாக நடித்திருப்பார். அதேபோன்று குடும்பஸ்தன் படத்தில் சான்வி மேக்னா ஹீரோயினாக நடித்திருந்தார். அவரும் தெலுங்கு பெண்தான். இப்படத்திலும் மணிகண்டனுக்கும் -சான்விக்குமான கெமிஸ்ட்ரி பார்க்கவே அற்புதமாக இருந்தது. ஒருவேலை தமிழ் நடிகைகளுடன் நடிப்பதில் மணிகண்டன் கூச்சப்படுகிறார் போல என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்திலும் தெலுங்கு நடிகை தான் ஹீரோயின் என அவரே கூறியுள்ளார்.

தெலுங்கு ஹீரோயின்: சமீபத்தில் மணிகண்டன் அளித்த பேட்டியில், நீங்கள் தெலுங்கு ஹீரோயின்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்கிறீர்கள் இதில் ஏதேனும் காரணம் இருக்கிறதா என தொகுப்பாளர் கேள்வி கேட்டதும். சிரித்துகொண்டே மணிகண்டன் பதில் அளித்தார். அப்படியெல்லாம் இல்லைங்க, இயக்குநர் கையில் தான் எல்லாமே நான் இந்த நடிகையை போடுங்க என்று கேட்பதில்லை. எனக்கு தெலுங்கு நல்லா பேச தெரியும். தெலுங்கு படத்திற்கு டப்பிங் பண்ணியிருக்கேன். இதைவிட காமெடி என்னுடைய அடுத்த படத்திற்கும் தெலுங்கு நடிகை தான் ஹீரோயின் என சிரித்தபடி தெரிவித்தார். தமிழ் நடிகைகளுக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்க மணி சார் என நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X