National Awards: கடைசி விவசாயி படத்துக்காக தேசிய விருது வென்ற மணிகண்டன்.. ஜனாதிபதி கையால் விருது!

டெல்லி: சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கடைசி விவசாயி படத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு இயக்குநர் மணிகண்டனுக்கு அந்த விருதினை வழங்கினார்.

Manikandan receives National Award for Kadaisi Vivasayi

விஜய்சேதுபதி, நல்லாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் எளிய மக்களின் வாழ்வியலையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் திரையில் காண்பித்து கண்ணீர் வர வழைத்த கடைசி விவசாயி திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினை வென்றுள்ளது.

69வது தேசிய விருது விழா டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் மணிகண்டன் வீர நடை போட்டு ஜனாதிபதி கையால் விருது வாங்கிய காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் முதல் ஆலியா பட் வரை: சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லுஅ ர்ஜுனுக்கு புஷ்பா திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்குவாய் கத்தியவாடி படத்தில் நடித்த ஆலியா பட் மற்றும் மிமி படத்தில் நடித்த க்ரித்தி சனோன் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மாதவனுக்கு விருது: சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதினை நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்துக்கு வழங்கி உள்ளனர். சிறந்த இசையமைப்பாளர் விருது புஷ்பா படத்துக்காக தேவி ஸ்ரீ பிரசாத் தட்டிச் சென்றார்.

Manikandan receives National Award for Kadaisi Vivasayi

சிறந்த தமிழ் படம்: 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்று வரும் நிலையில், சிறந்த தமிழ் படமாக தேர்வான கடைசி விவசாயி படத்திற்கான விருதினை அந்த படத்தின் இயக்குநர் மணிகண்டன் வாங்கி உள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

இந்த விருது விழாவில் தமிழ் படங்களுக்கான தேசிய விருதுகள் குறைவு என்கிற சர்ச்சை இருந்தாலும், கடைசி விவசாயி படத்திற்கு கிடைத்தது அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X