மணிகண்டன் வாழ்க்கையை மாற்றிய அந்த நபர்.. கமல், ரஜனி மாதிரி ஆசைபட்டா.. எல்லாம் மாறிப்போச்சு!

சென்னை: காலா, விக்ரம் வேதா, ஜெய்பீம் படங்களில் நடிகராக தோன்றினாலும், குட்நைட் படத்திற்கு பிறகு மணிகண்டன் வாழ்க்கையில் ஒரு பிரகாசமான தொடக்கத்தை எட்டியுள்ளார். குட்நைட், லவ்வர், குடும்பஸ்தன் படங்கள் கொடுத்த வெற்றி முன்னணி நடிகராகும் இடத்தை பிடித்துள்ளார். இவர் படங்களும் குடும்பங்கள் ரசிக்கும் படமாக மாறியுள்ளது. இவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி பல இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மாற்றம்: தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் மட்டும் போதாது அதிர்ஷ்டம் வேண்டும் என பலரும் கூறுவார்கள் ஆனால், நம்பிக்கையுடன் விடாமுயற்சி கொண்டு போராடிய மணிகண்டன் முகத்தில் சிரிப்பை காணும் தனது குடும்பத்தில் இருந்து ஒருவர் பெற்ற வெற்றியை போல் கொண்டாட தொடங்கியுள்ளனர். இயக்குநர்களின் நடிகர், மற்றவர்கள் கவனத்தை பெற்று உயரத்தை தொட்டுள்ளார். குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

manikandan interview manikandan kudumbasthan

ஜெய்பீம் ராஜாக்கண்ணு: ஜெய்பீம் ராஜாக்கண்ணுவை யாராலும் மறக்க முடியாது. மணிகண்டன் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்களும் பாராட்டை பெறுகின்றனர். ஜெய்பீம் படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்தவர்களின் வாழ்க்கையை பற்றி பேட்டிகளில் தெரிவித்து வியப்படைந்தார். அதேபோன்று சினிமாவில் பயணிக்க எடுத்த முயற்சிகளையும், கமலின் தீவிர ரசிகன் என்பதையும் தெரிவித்தார்.

manikandan interview manikandan kudumbasthan

மணிகண்டன் வேற ரகம்: காலா படத்தில் மணிகண்டன் ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார். இதில், லெனின் கதாப்பாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றன. படப்பிடிப்பின் போது ரஜினி சார் குறித்து பேசிய மணிகண்டன், ரஜினி நடித்த பாட்ஷா படத்தை விட அண்ணாமலை தான் சார் ரொம்ப பிடிக்கும் என்று கூறினேன். ஏன் என்று ரஜினி சார் கேட்டார், மணிகண்டன் கொடுத்த விளக்கம் ரஜினியை பிரம்மிக்க வைத்தது என்றும் அவர் சொன்னது போன்றே மணிகண்டனும் மிமிக்ரி செய்வார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

manikandan interview manikandan kudumbasthan

வசீகரிப்பு: சமீபகாலத்தில் மணிகண்டன் பேட்டிகளில் கமல் படங்களுக்கு கொடுக்கும் ரெபரன்ஸை பார்த்தால், பேட்டி எடுப்பவர்களுக்கே ஆச்சரியத்தை தரும். எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்று கேட்கும் போது சிரித்துகொண்டே நமக்கு வேற என்ன வேலை. இதுதான். அவரோட ரசிகராக இருந்துகொண்டு இதை பேசாமல் இருந்தால் தான் தவறு என்பார். அதேபோன்று லோகேஷ் கனகராஜ் மணிகண்டனுடன் தீவிர ரசிகர்களாக சண்டை போட்டுக்கொள்வதை பார்த்து ரசிக்கும் படி இருந்தன. விஜய் சேதுபதி பற்றி ரசிகர்களுக்கு தெரியாத பல விசயங்களை மணிகண்டன் பகிர்ந்துள்ளார். இப்படி ஒவ்வொன்றையும் சினிமாவுக்குள் இருந்துகொண்டு பலரது வாழ்க்கையை படித்து உயர்ந்தாலும் தன்மையோடு இருக்கிறார்.

manikandan interview manikandan kudumbasthan

ஆட்டோ ஓட்டுநர்: இதனிடையே, மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு முறை அதிக மன உளைச்சலில் இருந்தேன். ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றபோது, அவரிடம் பேச்சு கொடுத்தேன். அப்போது அவர் இந்த ஆட்டோ ஓட்டுறது எனக்கு பிடிக்கவே இல்லைண்ணா. சம்பாதிக்கிறது எதுவும் கையில் நிக்க மாட்டேங்குது. பொண்டாட்டியையும், குழந்தைங்களையும் சொந்த ஊருக்கே அனுப்பிட்டேன். அங்க எனக்கு நிலம் இருக்கு. அதுல கீரை போட்டிருக்கேன். ஒரு நல்ல மோட்டார் வாங்கணும். அதுக்காகத்தான் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். அந்த காசை சம்பாதிச்சிட்டேன்னா என் ஊருக்கு போயிடுவேன். அப்புறம் நான் ராஜா மாதிரி இருப்பேன் என என்னிடம் கூறியதாக மணிகண்டன் தெரிவித்தார்.

வாழ்க்கை: அப்போது தான் ஒன்றை புரிந்துகொண்டேன். அவரது சொந்த பிரச்னையை என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதை அந்த ஆட்டோக்காரர் சொல்லிகொடுத்தார். நம்பிக்கையோடு மீண்டும் உழைக்க தொடங்கினேன் என மணி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X