ஹீரோயினை இப்படி அசிங்கமா திட்டுறாரே மணிகண்டன்.. சர்ச்சையை கிளப்பும் லவ்வர் டீசர்!

சென்னை: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா நடிப்பில் உருவாகி உள்ள லவ்வர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு தனது காதலி இவர் தான் என முன்னதாக வீடியோ ஒன்றை மணிகண்டன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது.

பீட்சா 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிகண்டன். வசனகர்த்தாவாக அறிமுகமானவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது ஹீரோவாகவே உருவெடுத்து விட்டார்.

Manikandan starrer Lover Teaser out now with lot of bad words

வளர்ந்து வரும் மணிகண்டன்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கவின் போல இவரும் பெரும் உழைப்பை கொட்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், குட் நைட் படத்தை தயாரித்தவர்கள் அடுத்ததாக இன்னொரு படத்தையும் மணிகண்டனை ஹீரோவாக வைத்து உடனடியாக உருவாக்கியுள்ளனர். அந்த படத்தின் டீசர் தான் தற்போது வெளியாகியுள்ளது.

லவ்வர் டீசர்: அறிமுக இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் காதலர்களை கவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படம் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பேச்சுலர் டைப் படமாக உருவாகி இருக்கிறது. கல்லூரி காலத்தில் காதலிக்கும் பெண்ணுடன் ஏற்படும் பிரேக்கப் மற்றும் மீண்டும் காதல் என படு ரியாலிட்டியான மேக்கிங் உடன் டீசர் தெறிக்கிறது. மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியாவும் கிடைத்த கேப்பில் எல்லாம் நடிப்பில் அசத்தி உள்ளனர். ஆனால், டீசர் முழுவதுமே ஆணாதிக்க நெடியும் பசங்களோட இன்டென்ஷன் பசங்களுக்கு தான் தெரியும், அந்தப் பையனோட பழகாத, நான் உன்னை வேற மாதிரி பாக்குறான் என பொசஸிவ் நிறைந்த ஆணாகவே மணிகண்டன் காட்சி அளிக்கிறார்.

கெட்ட வார்த்தை: மேலும், ஹீரோயினை பார்த்து வார்த்தைக்கு வார்த்தை ஆபாசமாக திட்டுவதும் டீசர் முழுக்க நிறைந்திருப்பது இளைஞர்களை கவரும் வியாபார யுக்தியாக பார்க்கப்படுகிறது. அதுவே இந்த படத்துக்கு சர்ச்சையாகும் நிலைமைக்கும் கொண்டு செல்லும் என தெரிகிறது. எப்படியோ ஓடிடியில் படத்தை வெளியிடப் போவதில்லை. அதற்கு முன் தணிக்கையில் பல வசனங்கள் மியூட் செய்யப்படும். இந்நிலையில், தேவையில்லாமல் அத்தனை வசனங்களும் டீசரை டிரெண்டாக்கத்தான் என தெரிகிறது. அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு படம் வெளியாகும் என்கிற அறிவிப்பும் டீசருடன் இணைந்து வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X