ஹலோ எனக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் சண்டையா?.. என்ன பாஸ் இது?.. மனம் திறந்த மணிகண்டன்
சென்னை: மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். நடிகராக மட்டுமின்றி வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லவ்வர், குட் நைட் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. மணிகண்டன் அடிப்படையில் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர் ஆவார். கடந்த வருடம் விழா மேடை ஒன்றில் கமலை மையமாக வைத்து மணிகண்டனும், லோகேஷ் கனகராஜும் செய்த உரையாடல் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
கமல் ஹாசனுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றார்கள். சாதாரண மக்கள் எந்த அளவுக்கு கமல் ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே அளவு சினிமா துறையில் இருக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் கமலின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். கௌதம் மேனனில் ஆரம்பித்து இப்போது வந்திருக்கும் லோகேஷ் கனகராஜ்வரை அந்த லிஸ்ட் சென்றுகொண்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் சம்பவம்: கோவையில் கமலின் ஷூட்டிங்கை தூரமாக பார்த்து, சென்னையில் கமலின் வீட்டை ஏக்கத்தோடு பார்த்தவர் இன்று கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தையும் இயக்கிவிட்டார். அதுவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. இதனையடுத்து லோகேஷின் டிமாண்ட் திரைத்துறையில் அதிகரித்துள்ளது. மேடைக்கு மேடை தான் கமல் ஹாசனின் எவ்வளவு பெரிய வெறித்தனமான ரசிகர் என்பதை ஆணித்தரமாக சொல்லக்கூடியவர்.
லிஸ்ட்டில் மணிகண்டன்: லோகேஷ்தான் கமலின் தீவிர ரசிகர் என்று பார்த்தால் அந்த லிஸ்ட்டில் நடிகர் மணிகண்டனும் இணைந்திருக்கிறார். ஜெய் பீம், விக்ரம் வேதா, ஏலே, காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் அவர். நடிகராக மட்டுமின்றி விக்ரம் வேதா படத்துக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். மேலும் மிகச்சிறந்த பலகுரல் மன்னராகவும் மணிகண்டன் ஜொலித்துவருவது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லவ்வர், குட் நைட் ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் படங்களாக அமைந்து ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியிருக்கிறது.
மணிகண்டன் Vs லோகேஷ் கனகராஜ்: நிலைமை இப்படி இருக்க ஜெய் பீம் படத்துக்காக கடந்த வருடம் விருது வாங்கிய மணிகண்டன், 'நான் கமல் ஹாசனின் தீவிர ரசிகன். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்று சொல்லும்போதெல்லாம் அடிக்க வேண்டும் என தோன்றும். லோகேஷ் அது என்னுடைய இடம்' என ஓபனாக பேசியிருந்தார். அதனையடுத்து அதே மேடையில் பேசிய லோகேஷ், 'ஒன்னு இல்ல 100 மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழிச்சிட்டு சண்டைக்கு போவேன். கமல் சார பத்தி நான்தான் பெருமையா பேசுவேன்' என பதிலளித்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.
ஜாலிக்குத்தான்: இரண்டு பேரும் ஜாலிக்காக அப்படி பேசிக்கொண்டாலும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள் என்று சிலர் கிளப்பிவிட்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு மணிகண்டன் அளித்த பேட்டியின்போது நெறியாளர், உங்களுக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் சண்டையா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மணிகண்டன், "ஐயோ என்னங்க இது. நானும் கமல் சாரின் ரசிகன். லோகேஷும் கமல் சாரின் ரசிகன். ஒரு வகுப்பறையில் நமக்கு பிடித்த ஆசிரியர் இருக்கும்போது ஒருவர் அவரிடம் சென்று உங்களை எனக்கு பிடிக்கும் என்று சொல்லும்போது; இன்னொருவர் எழுந்து எனக்குதான் உங்களை ஃபர்ஸ்ட் பிடிக்கும் என்று சொல்வாரே அதுபோல்தான் அன்று நடந்தது.
அன்று பேசி முடித்துவிட்டு கீழே வந்து, தலைவா இப்படி பேசிட்டேனே என்றேன். அதற்கு அவரோ எங்கேயும் போகாதீங்க என் ரிப்ளையையும் கேட்டுட்டு போங்க என்று சொல்லிவிட்டுதான் பேசினார். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. அப்படி இருந்தால் அவர் ஏன் குட் நைட் படத்தின் டீசரை அவர் ஏன் வெளியிட வேண்டும். படத்தை ஏன் பாராட்ட வேண்டும்"என்றார். இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











