மணிகண்டனின் குடும்பஸ்தன் படத்தின் 4 நாட்கள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: ஜெய் பீம் படத்தில் ராசா கண்ணு என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டார் நடிகர் மணிகண்டன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து குட் நைட், லவ்வர் என தனக்கு தகுந்தபடி கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மணிகண்டன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் குடும்பஸ்தன். ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கும் இந்த படத்தில், குரு சோமசுந்தரம், சான்வி மேகனா, சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் நான்கு நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

வேறு ஒரு ஜாதியை சேர்ந்த கதாநாயகியான சான்வி மேகனாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ மணிகண்டன். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மணிகண்டனின் அக்கா கணவரான சோம சுந்தரம் பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். நல்ல சம்பளத்தை வாங்குவதால், அவருக்கு குடும்பத்தில் நல்ல மரியாதை, ஆனால், மணிகண்டன் வேறு ஒரு ஜாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாலும், குறைவான சம்பளம் வாங்குவதாலும் வீட்டில் மரியாதையே இல்லை.

kudumbasthan manikandan box office

குடும்பஸ்தன் படத்தின் கதை: இந்த நேரத்தில் தான் அலுவலகத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு மணிகண்டனுக்கு வேலை போய்விடுகிறது. அந்த விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வைத்து, வட்டிக்கு பணம் வாங்கி சம்பளமாக கொடுத்து வருகிறார். இந்த விஷயம் தெரிந்த, அக்காவின் கணவர் சோம சுந்தரம், இதுதான் மணிகண்டனை அவமானப்படுத்த சரியான நேரம் என்று, வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்லி விடுகிறார். இதனால், பிரச்சனை வெடிக்கிறது. இதனால், மணிகண்டனும் அவரது மனைவியும் அசிங்கப்படுகின்றனர். இதிலிருந்து மணிகண்டன் மீள என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை.

கதை தேர்வு சூப்பர்: வழக்கமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வரும் மணிகண்டன், இந்த முறையும் குடும்பஸ்தன் என்ற நல்ல கதை அம்சம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். மனைவி, அம்மா, அப்பாவின் தேவைக்காகப் பணம் தேடி ஓடுவது, குடும்பப் பாரம் சுமக்க முடியாமல் திண்டாடுவது, அதற்காகத் தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என முறுக்கிக் கொண்டு நிற்பது என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மணிகண்டன். முந்தைய படங்களில் இல்லாத வேறு ஒரு பரிமாணத்தை மணிகண்டன் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்.

அதேபோல நடுத்தர வர்க்கத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. தினம் தினம் அவர்களின் குடும்பத்தில் பணத்திற்காக என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். வழக்கம்போல மணிகண்டன் படத்தில் என்ன விதமான சுவாரஸ்யம் இருக்குமோ அதேபோல இந்த படத்தில் காமெடி, சென்டிமெண்ட் என படம் போரடிக்காமல் இருப்பதாக படம் பார்த்தவர்கள் படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

படத்தின் வசூல்: குடும்பஸ்தன் படத்திற்கு மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், படம் முதல் நாளிலேயே ஒரு கோடியை அள்ளியது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் 3.3 கோடியாக இருந்தது.நேற்று வேலை தினமாக இருந்த போதும் படம் ஒரு கோடியை வசூலித்தது. அதன்படி, நான்கு நாட்களில் குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் ரூ. 7.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X