Kudumbasthan public review: மணிகண்டன் குடும்பஸ்தனாக ஜெயித்தாரா.. ரசிகர்களின் விமர்சனம்!

சென்னை: ஜெய் பீம், குட் நைட், லவ்வர் என தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மணிகண்டனின் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள திரைப்படம் குடும்பஸ்தன். ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கும் இந்த படத்தில்,மணிகண்டன்,குரு சோமசுந்தரம்,சான்வி மேகனா,சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ரசிகர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

தியேட்டரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர்,படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எந்த இடத்திலும் போர் அடிக்காமல் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. உறவினர்கள் நம்முன் ஒன்று பேசுவார்கள் நாம் சென்ற பின் பின் ஒன்று பேசுவார்கள் அதை இந்த படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். மிடில் கிளாஸில் இருக்கும் மகன் வேலைக்கு செல்லவில்லை என்றால் அந்த குடும்பம் எந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கும் என்பதை இந்த படம் அழகாக சொல்லி இருக்கிறது. கடன் வாங்கி குடும்பம் நடத்தினால் என்னவாகும் என்பதையும் அதன் கஷ்டத்தையும் சொல்லிய விதம் சூப்பர். அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.

kudumbasthan manikandan public review

சூப்பரா இருக்கு: அனைவருக்கும் கனெக்ட்டாக கூடிய படம் தான் இந்த குடும்பஸ்தன் படம். தினம் தினம் வாழ்க்கையில் நாம் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறோமோ அதை அனைத்தையும் இந்த படத்தில் கதையாக சொல்லி இருக்கிறார்கள். படத்தின் இசை, நகைச்சுவை என அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. வழக்கம்போல மணிகண்டன் இந்த படத்திலும் வச்சு செய்து விட்டார். சூப்பராக நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

மணிகண்டன் கலக்கிட்டார்: படம் பார்த்த மற்றொரு ரசிகை இந்த படம், உண்மையிலேயே ஒரு மனதிற்கு ஒரு நெருக்கமான படமாக இருந்தது. மிடில் கிளாஸில் இருப்பவர்கள் என்ன விதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதே இந்த படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார்கள், வழக்கம்போல மணிகண்டன் படத்தில் என்ன விதமான சுவாரஸ்யம் இருக்குமோ அதேபோல என்ன படமும் சுவாரசியம் இருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து மணிகண்டன் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் மணிகண்டனின் வேறு ஒரு பரிமாணத்தை பார்க்கலாம்.படம் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது.

அனைவரும் பார்க்கலாம்: படத்தின் முதல் பாதையில் சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. ஆனால் இரண்டாவது பாதியில் அனைவரையும் அழ வைத்துவிட்டார். செம சென்டிமென்ட் பின் கிளைமாக்ஸில் சிரிக்க வைத்து விடுகிறார்கள். படம் நன்றாகவே இருந்தது. குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கலாம். அதே போல இதில் நடித்த கதாபாத்திரங்கள் அவரும் அவரவர்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடத்திருக்கிறார்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X