Lover First Review: எதிர்பாராத கிளைமேக்ஸ்.. மணிகண்டனின் லவ்வர் படம் குறித்து வெளியான முதல் விமர்சனம்
சென்னை: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ஜெய்பீம், குட் நைட் படங்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. காதலர்களை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படம் குறித்த முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு குட் நைட் படத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். அந்த படத்தை தயாரித்த நிறுவனமே மணிகண்டன் நடித்துள்ள இந்த லவ்வர் படத்தையும் தயாரித்துள்ளனர். நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வரும் மணிகண்டனின் இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

பெஸ்டி பற்றி மணிகண்டன்: லவ்வர் படத்திற்காக தீவிரமாக புரமோஷன் செய்து வரும் மணிகண்டன் சமீபத்தில் பெஸ்டியை வில்லனாகவே சித்தரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னுடன் எல்கேஜியில் இருந்து படித்த தோழிகள் இன்னமும் டச்சில் இருக்காங்க, அவங்களாம் இல்லைன்னா நான் நிறைய விஷயத்தை இழந்திருப்பேன். பெண்களை ஆண்கள் நம்பினால் இந்த பெஸ்டி பிரச்சனையே வராது. திருமணமான பெண்கள், ஆண்கள் அனைவரும் நண்பர்களுடன் பழகுவதில் எந்தவொரு தவறும் இல்லை. அந்த நட்புக்கு ஏகப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டு அதை ஏதோ தப்பான உறவு போல சித்தரிப்பது தான் தவறு என்று பேசியிருந்தார்.
காதல் தான் கதை: காதலர்களுக்குள் எழும் சந்தேகங்களும், காதலியை சந்தேகிக்கக் கூடாது என்கிற கருத்துடன் தான் லவ்வர் படம் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், காதலர்களுக்குள் நடக்கும் ஈகோ கிளாஷ், சந்தேகத்தால் நடக்கும் பிரேக்கப், மீண்டும் நடக்கும் பேட்ச்சப், பெஸ்டி உள்ளிட்ட விஷயங்களை வைத்து இந்த கதையை பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கிறார்.
முதல் விமர்சனம்: லவ்வர் திரைப்படத்தில் மணிகண்டன் மற்றும் ஸ்ரீகெளரி பிரியா இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்று விட்டது. இந்த படம் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸை ரொம்பவே கவர் செய்யும். காதலர்களை டார்கெட் செய்து இயக்குநர் திரைக்கதை, வசனம் என அனைத்தையும் அட்டகாசமாக செதுக்கி இருக்கிறார். கொஞ்சம் கூட படம் எங்கேயும் லேக் ஆகாமல் நல்லா போய்க் கொண்டே இருக்கிறது. மணிகண்டனுக்கு இன்னொரு நல்ல படமாக லவ்வர் படம் இருக்கும் என்றும் ப்ரீமியர் ஷோவில் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

வித்தியாசமான கிளைமேக்ஸ்: அதெல்லாம் தேவையில்லை. காதலர்கள் இருவரும் கடைசியில் சேர்வார்களா? இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க பாஸ் என ரசிகர்கள் படத்தை பார்க்கும் முன்னே அனைத்தும் தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டு கேள்வியை எழுப்ப எல்லாத்தையும் என்னிடமே கேட்டால், படத்தை தியேட்டரில் போய் பாருங்க ப்ரோ என கமெண்ட் போட்டு கப்சிப் ஆக்கி விட்டார். ஆனால், படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்றும் ஒரு ஹின்ட் கொடுத்து மணிகண்டனின் லவ்வர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு குட் நைட் படம் ஹிட் கொடுத்ததை போல மீண்டும் வெற்றியை மணிகண்டன் ருசிப்பாரா என்பது நாளை தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











