வெற்றிக் கூட்டணியின் நரை எழுதும் சுயசரிதம்... பார்க்க ரெடியா...சோனி லைவில் வெளியீடு
சென்னை : ஜெய்பீம் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன்.
இவர் எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக கோலிவுட்டில் வலம் வருகிறார்.
இந்நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது நரை எழுதும் சுயசரிதம் என்ற படம் உருவாகியுள்ளது.

நரை எழுதும் சுயசரிதம் படம்
நடிகர் மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். இவர் நடிகர், வசனகர்த்தா உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவராக உள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நரை எழுதும் சுயசரிதம்.

விருதுகளை குவித்த படம்
இந்தப் படத்தை ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரித்துள்ளார். ஜிகே வாஹினி புரொடக்ஷன்ஸ் சார்பில் இவர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். முன்னதாக பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பல விருதுகளை அள்ளியுள்ளது. விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

டெல்லி கணேஷ் நடிப்பு
படத்தில் டெல்லி கணேஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு சிறப்பான கேரக்டர்களில் நடித்துள்ள அவருக்கு மகுடம் சேர்க்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது. மேலும் படத்தில் மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவசங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா, ஷோபனா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

சோனி லைவில் வெளியீடு
வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிபூர்வமான தருணங்களை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படம் தற்போது சோனி லைவில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது. பணி ஓய்வை நோக்கி நகரும் ஒருவரின் வாழ்க்கையில் வேலையில்லாத இளைஞர் நுழையும் போது ஏற்படும் மாற்றம் படத்தின் கதைக்களமாக உள்ளது.

இயக்குநர் குழுவில் விஷால் வெங்கட்
சமீபத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இந்தப் படத்தின் இயக்குநர் குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல தயாரிப்பாளர் ஷஷாங்க் வெண்ணெலகண்டி தெலுங்கு திரையுலகின் பிரபல எழுத்தாளர்.

பவன் இசை
படத்திற்கு பவன் இசையமைத்துள்ளார். ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் என்று சிறப்பான கேரக்டர்களை ஏற்று நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் மணிகண்டன். அவரது முதல் படமே வித்தியாசமான கதைக்களத்துடன் உள்ளது பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











