Manimegalai: சூர்யா ஹீரோயினை ஜோடியாக்கிய லெஜண்ட் சரவணன்.. குக் வித் கோமாளி மணிமேகலையும் இருக்காங்க!
சென்னை: தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் முதல் படத்தில் பாலிவுட் நடிகைகளான ஊர்வசி ரவுத்தேலா மற்றும் கீதிகா திவாரி உள்ளிட்ட நடிகைகளை ஹீரோயினாக நடிக்க வைத்திருந்தார்.
பெரும் பொருட்செலவில் உருவான அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், அடுத்த படத்தில் நடிக்க தாடியுடன் தனது தோற்றத்தையே வித்தியாசமாக மாற்றி கெத்துக் காட்டி வருகிறார் லெஜண்ட் சரவணன்.

இந்நிலையில், குக் வித் கோமாளி பிரபலங்களான மணிமேகலை மற்றும் ஸ்ருதிகா அர்ஜுன் இருவரும் லெஜண்ட் சரவணன் உடன் ஜோடியாக நிற்கும் போட்டோ வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

குக் வித் கோமாளியில் இருந்து விலகல்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்த மணிமேகலை சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை கிளப்பியது. புதிதாக மணிமேகலை என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தொடர்ந்து பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை தற்போது லெஜண்ட் சரவணன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.
சூர்யா ஜோடி: ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிகா அர்ஜுன் குக் வித் கோமாளியில் குக்காக களமிறங்கி விஜய் டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரும் லெஜண்ட் சரவணன் அருகே ஜோடியாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நியூ லுக்கில் லெஜண்ட் சரவணன்: தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்காக தாடி எல்லாம் வைத்துக் கொண்டு புதிய தோற்றத்தில் மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில், இந்த பக்கம் நெருக்கமாக மணிமேகலையும், அந்த பக்கம் கொஞ்சம் தள்ளி ஸ்ருதிகா அர்ஜுனும் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட மணிமேகலை புதிதாக சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளோம் என்றும் அதன் பிறகு லெஜண்ட் சரவணனையும் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டோம். மனுஷன் ரொம்பவே ஹம்பலானவர். என்னோட பைத்தியக்கார தோழி ஸ்ருதிகா அர்ஜுன் உடன் நடந்த விளம்பர ஷூட் செம ஃபன்னாக சென்றது என மணிமேகலை போஸ்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











