ஏ மாடு..எனக்கு ஹாப்பி பார்த்டே சொல்லு..மாட்டுக்கு கேக் ஊட்டிய மணிமேகலை !
சென்னை : மாட்டுக்கு கேக் ஊட்டி பிறந்த நாளை கொண்டாடிய விஜே மணிமேலை. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தன் ஜாலியான பேச்சு திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் விஜே மணிமேகலை. பின்னர் மணிமேகலை, டான்ஸ் மாஸ்டரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து, குடும்பத்தினரை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் அனைவரும் விரும்பும் ஜோடியாக விளங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி மணிமேகலை பல ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடையில் பெரும் பிரபலமாகிவிட்டார். இதையடுத்து, மணிமேகலைக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

சின்னத்திரை வெள்ளித்திரை என படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் பல திரை பிரபலங்களும் தங்களது வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதேபோல் மணிமேகலையும் அவரது கணவருடன் கிராமத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மணிமேகலைக்கு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையில், அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் பிறந்தநாள் உடையான சேலையை அணிந்து கொண்டு பிறந்தநாள் கேக்கை மாட்டிற்கு ஊட்டுவது போல் போஸ் கொடுக்கிறார்.

இந்த போட்டோவின் மேல் 'ஏ மாடு குட்டி இன்னைக்கு என்னோட பர்த் டே, இந்தா கேக் சாப்பிடு, எனக்கு ஹாப்பி பார்த்டே சொல்லு என்று காமெடியான கேப்ஷன் போட்டு பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி, உங்கள் பிறந்தநாள் சேலை நல்லா இருக்கு என்று கருத்து பதிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











