Don't Miss!
- News
வட இந்தியர்கள் பாஜக வாக்காளர்கள்.. அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் இங்கே இருக்கு..அட்டாக் மோடில் சீமான்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இறுக்கி அணைச்ச ஷகீலா.. அப்படியே நெகிழ்ந்து போன "மணி".. செம!
சென்னை : சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் விஜே மணிமேகலை. இவருக்கு, சமூகவலைத்தளங்களில் அத்தனை ரசிகர்கள் கூட்டம். பாட்டு கேட்பதற்காக போன் செய்வதை விட இவரிடம் பேசுவதற்காக போன் செய்யும் ரசிகர்களே அதிகம்.
தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.
மிரட்டும் பார்வதி நாயர்.. கருப்பு டிரஸ்.. அதை யார் பார்த்தா.... முரட்டு சிங்கிள்ஸ்கள் ஜாக்கிரதை!
இவர் தனது திறமையால் சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளியான வலம் வந்தார். சிரிக்க சிரிக்க பேசுவது, யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வே இவரை வெற்றித் தொகுப்பாளினியாக உயர்த்தி உள்ளது.

காதல் திருமணம்
இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹூசன் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

செல்ல சண்டை
இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பரன மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோ தொடங்கி அனைத்திலும் இவர்களின் ஒற்றுமை, செல்ல சண்டைகள் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. துருதுரு பெண்ணாக நாம் பார்த்து வந்த மணிமேகலை இப்போது குடும்ப பெண்ணாக மாறி குடும்பத்தை பொறுப்புடன் வழி நடத்தி வருகிறார்.

கோமாளியாக
தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் அதே கலகலப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், பவித்ரா, பாபா பாஸ்கர், ஷகீலா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.

நலம் விசாரித்தார்
இந்நிலையில், மணிமேகலை தனது காலில் கொதிக்கும் நீரை ஊற்றிக் கொண்டதாகவும், காலில் தோல்கள் பிரிந்து வர தொடங்கியதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான ஷகீலா, மணிமேகலையை அவரது வீட்டுக்கே சென்று நலம் விசாரித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.