அந்த லேடி ஆங்கரோட பிரச்னை.. மணிமேகலையின் புது ஸ்டாண்டா? அந்த ஷோவிற்கு போகிறாரா?
சென்னை: குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ஒரு சில இணையவாசிகள் இது மணிமேகலையின் புது ஸ்டாண்ட் என்றும் அவர் வேறு ஒரு பிளான் வைத்து இருக்கிறார் என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளியாகும், 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

குக் வித் கோமாளி: 5வது சீசன் ஆரம்பிக்கும் போதே பிரச்சனை தான் என்பது போல, வெங்கடேஷ் பட் வெளியேறினார். இதைத்தொடர்ந்து தற்போது விஜே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் எப்பொழுதும் கடின உழைப்பையும் நான் கொடுப்பேன். அதேபோலதான் 2019 நவம்பரில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியுடன் எனது பயணம் தொடங்கியது.
விலகிய மணிமேகலை: ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன். சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை. என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் என எதுவாக இருந்தாலும், சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இத்தருணத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன்.
இந்த சீசனில் 'குக்' ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் குக் என்பதையே மறந்து, தொகுப்பாளரின் வேலையை செய்ய விடாமல், நிறைய குறுக்கீடுகளை செய்கிறார். நமது உரிமைகளைக் கேட்பதும், கவலையை எழுப்புவதும் கூட இந்தப் சீசனில் குற்றமாகிவிடுகிறது. ஆனால் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அதற்கு நான் குரல் எழுப்புவேன் என பதிவிட்டு இருந்தார்.
மணிமேகலையின் புது ஸ்டேண்ட்: மணிமேகலையின் இந்த பதிவைத் தொடர்ந்து பலரும் மணிமேகலை வெளியேற பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என்றும், அவர்களுக்குள் என்ன சண்டை என்று தெரியவில்லை என கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், ஒரு சில நெட்டிசன்ஸ் உண்மையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலக இதுதான் காரணமா என்றும், மணிமேகலையை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு ஹைப்போடு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக, வழக்கம் போல விஜய் டிவி செய்யும் ஸ்டண்ட் வேலையா? என்றும் கேட்டு வருகின்றனர். ஏன் ஏறக்குறைய குக் வித் கோமாளி முடியப்போகும் நேரத்தில் எதற்கு மணிமேகலை இவ்வாறு சொல்ல வேண்டும் என நெட்டிசன்ஸ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











