விஜய் டிவிக்கு குட் பை சொன்ன மணிமேகலை.. ஜீ தமிழில் DJD நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி புரோமோ வீடியோ!
சென்னை: கடந்த ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை, விஜய் டி.விக்கும் குட்பை சொன்னார். பின்னர், ஜி தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜி தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியில் மணிமேகலை என்ட்ரி ஆகியுள்ளார். அதுதொடர்பான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
டான்ஸ் ஜோடி டான்ஸ்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இதன் 3ஆவது தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகைகள் சினேகா, வரலட்சுமி சரத்குமார் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். முன்பு நடந்த நிகழ்ச்சியில் சங்கீதா நடுவராக இருந்த நிலையில், அவர் விலகியதால் வரலட்சுமி சரத்குமார் முதல் முறையாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஸ்டார்களை உருவாக்கிய DJD: இந்த நிகழ்ச்சி பல திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. சந்தியாராகம் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் DJD நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார். அதேபோன்று பலருக்கும் அறிமுகம் கொடுத்துள்ளது இந்நிகழ்ச்சி. மேலும், பல மாற்றங்களை ஜி தமிழ் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, ஆர்.ஜே.விஜயுடன் இணைந்து மணிமேகலையும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தாெகுத்து வழங்க இருக்கிறார். அது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி: மணிமேகலை ஆரம்ப காலகட்டத்தில் பல தொலைக்காட்சிகளில் வேலை பார்த்திருந்தாலும், விஜய் டிவி அவருக்கு நிலையான பெயரையும் புகழையும் வாங்கி கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முன்பு கோமாளியாக அசத்தினார். அவர் செய்யும் குறும்பு தனங்களை மக்கள் ரசித்து கொண்டாடினர். பின்பு, CWC நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விஜய் டிவிக்கு குட்பை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் ஒருவருக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுப்பதாக மணிமேகலை குற்றம்சாட்டினார். வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என கூறி என்னுடயை வேலையில் தலையிடுகிறார். எனக்கு சுயமரியாதை இருக்கிறது. அதனால் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என மணிமேகலை தெரிவித்தார். அதன்படியே CWC நிகழ்ச்சியில் மட்டும் அல்ல, விஜய் டிவியில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் வி.ஜே. பிரியங்கா தான் காரணம் எனக் கூறி நெட்டிசன்கள் பிரியங்காவை திட்டி தீர்த்தனர்.

ஜீ தமிழில் என்ட்ரி: சமீபத்தில் ஜீ தமிழில் மணிமேகலை என்ட்ரி தரவுள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி, மணிமேகலை தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3ல் தொகுப்பாளினியாக வந்துள்ளார். இந்நிகழ்ச்சி வருகிற மார்ச் 1 முதல் இந்த ஆரம்பம் ஆகிறது. மணிமேகலை என்ட்ரி தந்துள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு மணிமேகலையின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











