இயக்குநர் மணிரத்னம் பேர்ல போலி கணக்கு... உண்மையை உரக்க சொன்ன சுஹாசினி
சென்னை : இயக்குநர் மணிரத்னம் தனது 65வது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.
இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.
இதனிடையே அவர் ட்விட்டர் அக்கவுண்ட்டை துவக்கியுள்ளதாகவும் செய்திகள் பரவின.

காலத்தை வென்ற படங்கள்
மௌன ராகம், இருவர், பம்பாய், ரோஜா உள்ளிட்ட ஏராளமான காலத்தை வென்ற படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தை எடுத்து வருகிறார். ஏராளமான பொருட்செலவில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டரின் புதிய அக்கவுண்ட்
இந்நிலையில் நேற்றைய தினம் அவர் தனது 65வது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இதையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதனிடையே அவர் தனது பிறந்தநாளில் ட்விட்டரின் புதிய அக்கவுண்டை துவக்கியுள்ளதாக செய்திகள் பரவின.

சுகாஹினி விளக்கம்
இதுகுறித்த விளக்கத்தை அவரது மனைவியும் நடிகையுமான சுகாஹினி மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தவறான செய்தி என்று அவர் கூறியுள்ளார். இது போலியான கணக்கு என்றும் இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் அவதாரம்
சுஹாசினி மணிரத்னம் சிறந்த நடிகையாக தன்னை அடையாளப்படுத்தியவர். மணிரத்னத்தை திருமணம் செய்த அவர் நடிப்பிலிருந்து விலகினாலும் சமூக அக்கறையுள்ள பல்வேறு விஷயங்களை தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பல்வேறு குறும்படங்கள் உள்ளிட்டவற்றையும் இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











