»   »  முன்பு தளபதி Vs குணா... இப்போது உத்தம வில்லன் Vs ஓ காதல் கண்மணி!

முன்பு தளபதி Vs குணா... இப்போது உத்தம வில்லன் Vs ஓ காதல் கண்மணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலின் உத்தமவில்லன் படத்துடன் மோதுகிறது மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்துள்ள படம் உத்தமவில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

உத்தம வில்லன் வரும் ஏப்ரல் 10ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. ஈராஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி

இந்த நிலையில் கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் தயாரித்து இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படமும் அதே ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

மோதல்

மோதல்

ஆக கமல் படத்துடன் மணிரத்னம் படம் மோதுகிறது. இருவரது படங்களும் இதற்கு முன் 1991-ம் ஆண்டு மோதின.

தளபதி Vs குணா

தளபதி Vs குணா

அன்றைக்கு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதியும், சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணாவும் ஒரே நாளில் வெளியாகின. தளபதி பெரும் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது.

இந்த முறை என்னவாகும்...

இந்த முறை என்னவாகும்...

ஆனால் இன்றைக்கு மணிரத்னம் அந்த பழைய ஃபார்மில் இல்லை. கமல் ஹாஸனின் புதிய படத்தின் கதையும் யாருக்கும் பிடிபடவில்லை. எனவே இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீசில் எப்படி போகப் போகின்றன என்பதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறது கோடம்பாக்கம்.

English summary
After the clash of Thalapathy Vs Guna in 1991, a Manirathnam movie is clashing again with Kamal movie on April 10th.
Please Wait while comments are loading...