இது என்ன மணிரத்தினத்திற்கு வந்த சோதனை.. பொன்னியின் செல்வன் வெளியாவதில் சிக்கல்?

சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் ஜூன் மாதம் பிரம்மாண்ட விழாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்திற்கான ப்ரோமோஷனையும், இப்படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்து தொடக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாடல் எழுதிய மணிரத்னம்

பாடல் எழுதிய மணிரத்னம்

இந்த படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகளை இப்போது ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு பாடலை இயக்குனர் மணிரத்னமே எழுதியுள்ளதாகவும். வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

குவாலியரில்

குவாலியரில்

மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிசேரி ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியரில் நடைபெற்றது. குவாலியர் கோட்டை 9 நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.

வெளியாவதில் சிக்கல்

வெளியாவதில் சிக்கல்

இந்த படத்தின் பின்னணி இசையமைப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது இதில், ஏ.ஆர். ரஹ்மான் ஒரு சில காட்சிகள் சரியாக இல்லை என கூறினாராம். இந்த காட்சிகளை படத்தில் வைத்தால்,படம் மொத்தமும் வீணாகிவிடும் என்றும், இதனால், இந்த காட்சிகளை மீண்டும் எடுங்கள் என்று மணிரத்தினத்திடம் ஏ.ஆர் ரஹ்மான் கூறியுள்ளதாக தெரிகிறது. படத்தில் அந்த காட்சியை மீண்டும் எடுப்பது என்பது மிகவும் சிரமமான வேலை என்பதால் மணிரத்னம் குழப்பத்தில் உள்ளதாக கூறுப்படுகிறது. இதனால், பொன்னியின் செல்வன் திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பரில் வெளியாகுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X