பிரசாந்துக்காக 27 ஆம் தேதி முக்கிய வேலையைச் செய்யும் மணிரத்னம்!
பிரசாந்த் படத்தின் டீசரை மணிரத்னம் வெளியிட உள்ளார்
சென்னை: இயக்குனர் மணிரத்னம் நடிகர் பிரசாந்தின் ஜானி பட டீசரை வெளியிடுகிறார்.
80, 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் நடித்த குட்லக், பார்த்தேன் ரசித்தேன், ஜீன்ஸ், ஜோடி, சாக்லேட், ஸ்டார், மஜ்னு போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

வின்னர், லண்டன் போன்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவை வெகுவாக பாராட்டப்பட்டது. சமீப காலங்களில் வந்த மம்பட்டியான், புலன் விசாரணை 2 ஆகிய படங்கள் பேசப்பட்டன.
சாகசம் திரைப்படத்திற்கு பிறகு இப்போது பிரசாந்த் நடித்துவரும் திரைப்படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை பா.வெற்றிச் செல்வன் இயக்குகிறார்.
இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜானி திரைப்படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வரும் 27ஆம் தேதி பிரசாந்தின் யூட்யூப் சேனலில் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











