அக்டோபர் 6 முதல் மணிரத்னத்தின் புதுப்படம் தொடக்கம்!
அக்டோபர் 6-ம் தேதி முதல் மணிரத்னம் இயக்கும் புதிய படம் தொடங்குகிறது. இதில் துல்க்வார் சல்மான் நாயகனாக நடிக்கிறார்.
கவுதம் - துளசியை வைத்து கடல் என்ற படத்தை கடந்த ஆண்டு இயக்கினார் மணிரத்னம். இது பெரிய தோல்விப் படமாக அமைந்தது.
அதன் பிறகு வேறு படங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் எதுவும் அவருக்கு சரியாக அமையவில்லை.
இந்த நிலையில் அடுத்த படத்தையும் தன் சொந்தத் தயாரிப்பாக ஆரம்பிக்கிறார்.

துல்க்வார் சல்மான்
இதில் மம்முட்டியின் மகன் துல்க்வார் சல்மான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதலில் முகமூடி பூஜா ஹெக்டேவிடம் பேசினர். ஆனால் அவர் நடிக்க சம்மதிக்காததால் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்துகிறார் மணிரத்னம்.

ஏஆர் ரஹ்மான்
இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தன் மகன் அமீனை ஒரு பாடகராகவும் இதில் அவர் அறிமுகப்படுத்தவிருக்கிறார்.

பிசி ஸ்ரீராம்
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் ஒரு காலத்தில் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்த பிசி ஸ்ரீராம். அலைபாயுதே படத்துக்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

அக்டோபர்
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்குகிறது. இதனை உறுதிப்படுத்தி ட்விட்டரில் எழுதியுள்ளார் பிசி ஸ்ரீராம்.


Click it and Unblock the Notifications











