JFW Awards 2023: விருதுகளை மொத்தமாக அள்ளிய பொன்னியின் செல்வன்.. த்ரிஷாவுக்கும் விருது!
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல பிரிவுகளில் விருதை அள்ளியது.
JFW Movie Awards 2023 வழங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வர்த்தக மையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த JFW திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த அறிமுக நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த டப்பிங் கலைஞர், சிறந்த பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பொன்னியின் செல்வன் பாகம் 1
எம்.ஜி.ஆர்,கமல்ஹாசனின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கினார். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன்,விக்ரம் பிரபு, பிரபு,நாசர், பிரகாஷ் ராஜ்,ரகுமான் என ஏராளமானோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

திரையரங்கில் குவிந்த கூட்டம்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தார். பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது. பொன்னியின் செல்வன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்து படத்தைப்பார்த்து ரசித்தனர்.

ஏப்ரல் 28ந் தேதி ரிலீஸ்
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான 'அக நக பாடல் வெளியாகி படத்தின் மீதான ஆவலை மேலும் இரட்டிப்பாக்கி உள்ளது. இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன் பாடலை பாடியிருக்கிறார். மேலும், கார்த்தி கண்கள் கட்டப்பட்ட நிலையில், த்ரிஷா கையில் கத்தியுடன் இருந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது

விருதுகளை குவித்து
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் JFW Movie Awards 2023 விருதுகளில் பொன்னியின் செல்வன் பல விருதுகள் குவிந்துள்ளது. இதில் சிறந்த நடிகையாக திரிஷாவும், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக எலகான், சிறந்த பாடலாசிரியராக கிருத்திகா நெல்சன், சிறந்த டப்பிங் கலைஞராக தீபாவெங்கட், சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் தேர்வில் ஐஸ்வர்யா லட்சுமியும் விருதுகளை வென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











