twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ ஆர் ரஹ்மானிடம் பாடல் கேட்டால் தீம் மியூசிக் போட்டு வைத்திருப்பார்!- மணிரத்னம்

    By Shankar
    |

    காற்று வெளியிடை இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் , கார்த்தி, அதீதி ராவ் ஹைதாரி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.

    விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், "25 வருடம் நானும் ரஹ்மானும் ஒன்றாகப் பயனித்துள்ளோம். அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல்தான் இப்பவும் அவர் உள்ளார்.

    Manirathnam's speech in Kaatru Veliyidai audio launch

    காற்று வெளியிடை திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும். நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படபிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களைப் பார்த்துள்ளேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியைச் சந்தித்த போது, 'நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படபிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன்,' என்றார். அதுதான் அவர்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும்.

    ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை பாடலுக்காக சந்திக்கச் சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி, தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும். என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடி பிடித்து கொடுப்பவர் அவர்.

    கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் நன்றி கூறிகொள்கிறேன். அடுத்த படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னால் இப்போதே கேட்டு கொள்கிறேன்," என்றார்.

    English summary
    Manirathnam says that his combination with AR Rahman is lasting more than 25 years and hopes it continues in next movie after Kaatru Veliyidai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X