திரைத் துளி
மும்பை:
தமிழ் சினிமா உலகின் ஸ்டார் இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் மீண்டும் நடிக்கவுள்ளார்.
இருவரும் இணைந்துதான் நாயகனை உருவாக்கினார்கள்.
இத்தகவல்களை செய்தியாளர்களிடம் கூறிய கமல்ஹாசன், இந்தி, தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகும் தனது படமான "அபய் " யின்வெளியீட்டிற்குப்பின், மெளலியுடனான ஒரு காமெடி படம் முடிந்ததும், இது குறித்து தெரிவிப்பேன் என்றார்.
முதுகுவலி காரணமாக கமலின் "அபய்" திரைப்பட ரிலீஸ் மே மாதம் வரை தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னத்திடம் இது குறித்து கேட்ட போது, கமலை வைத்து படமாக்குவது குறித்த திட்டம் பரிசீலனையில்உள்ளது என்று மட்டுமே கூறினார்.
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அலைபாயுதே புகழ் மாதவன் மீண்டும் கதாநாயகனாகிறார்.
தொலைக்காட்சி மோகத்தில் இருக்கும் மக்களை திரைப்படத்தின் பால் ஈர்க்க முயற்சிக்கும் திரைத் துறையினரின்நடவடிக்கையில் ஒன்று தான் பல்துறை சாதனையாளர்கள் ஒன்றிணைந்து படங்களை தரும் முயற்சியாகும்.
இந்த முயற்சிக்கு அடித்தளமிட்டவர் சுபாஷ் கை, தனது "விதாதா " படத்திற்கு திலீப் குமாரை நடிக்க வைத்திருந்தார். இந்த வரிசையில்சேர வருகின்றனர் ஜங்கிள் பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவும், அஜய் தேவ்கனும். வர்மாவின் அடுத்த தயாரிப்பான "கம்பெனி "யில்தேவ்கன் நடிக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்


Click it and Unblock the Notifications











