நான் ரொம்ப லக்கி.. மணிரத்னம் ஒரு ஜீனியஸ்.. பொன்னியின் செல்வன் குறித்து ஐஸ்வர்யா ராய் நெகிழ்ச்சி!

சென்னை: 1997 ஆம் ஆண்டு இருவர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் தனது அனுபவம் மற்றும், மணிரத்னம் குறித்தும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் என்ட்ரி

தமிழ் சினிமாவில் என்ட்ரி

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், இருவர் படத்தின் மூலம் நடிகையாக தனது கேரியரை தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ரேவதி, தபு, கௌதமி என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். முதல் படத்திலேயே ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பிரம்மாண்டமாக பேசப்பட்டது. ஏ ஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் ஐஸ்வர்யா ராயை தேடி வந்தது.

பாராட்டும் நடிப்பு

பாராட்டும் நடிப்பு

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் திரைப்படத்தில் அனைவரின் மனதையும் வென்றார் ஐஸ்வர்யா ராய். பிரஷாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், நாசர், லட்சுமி, ராதிகா என்று இந்த படத்திலும் பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தனர். ஐஸ்வர்யா ராய்க்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகும் அளவிற்கு இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் 2000 ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் கவனம்

பாலிவுட்டில் கவனம்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் துருதுரு பெண்ணாக இருக்கும் ஐஸ்வர்யா ராயின் அக்காவாக தபு, அஜித், மம்முட்டி, அப்பாஸ் என்று பலரும் நடித்திருந்தனர்.இந்த படத்தை இயக்கியவர் ராஜீவ் மேனன். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வரவே தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு

நீண்ட இடைவேளைக்கு பிறகு

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கழிந்து தமிழில் ராவணன் படத்தில் நடித்திருந்தார். ராவணன் படத்திலும் மணிரத்தினத்துடன் இணைந்தார் ஐஸ்வர்யா ராய். அடுத்து சங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தில் சனா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பல வருடங்கள் கழித்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ் என்று நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கும் இந்த படத்தின் போஸ்டர்களும் டீசரும் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மிரள வைத்தது.

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா

நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டது. பேன் இந்திய படமாக வெளியாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கூறுகையில், " தற்போது நான் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளேன், முதன் முதலில் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தியது மணிரத்னம் தான், மணிரத்தினம் ஒரு ஜீனியஸ், அவர் படத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன், நான் மிகவும் லக்கியான பர்சன் " என்று கூறியதுடன் தானும் பொன்னின் செல்வனை திரையரங்குகளில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X