»   »  விஜய் சேதுபதி, சிம்பு நடிக்கும் மணிரத்னம் பட டைட்டில் அறிவிப்பு!

விஜய் சேதுபதி, சிம்பு நடிக்கும் மணிரத்னம் பட டைட்டில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்.. குஷியில் அதிதி

சென்னை : மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் ஆகியோர் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.

மணிரத்னம் கடைசியாக இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்து வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியது.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தின் டைட்டில் 'செக்கச் சிவந்த வானம்' என வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி - சிம்பு

விஜய் சேதுபதி - சிம்பு

மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அருண் விஜய், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஹ்மான் இசை

ரஹ்மான் இசை

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இந்தப் படத்திற்கான இசைக்கோர்ப்பில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முதல்முறை கூட்டணி

முதல்முறை கூட்டணி

மணிரத்னம் படத்தில் நடிப்பது இவர்களில் பலருக்கும் முதல் முறை. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அருண் விஜய் ஆகியோர் மணிரத்னத்துடன் முதல்முறையாகக் கை கோர்க்கிறார்கள்.

கதையில் மாறுதல்

கதையில் மாறுதல்

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அருண் விஜய் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் சில நாட்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால், கதையில் மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த சூழலில் இன்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு 'செக்கச் சிவந்த வானம்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

ட்ரெண்டாகும் டைட்டில்

'செக்கச் சிவந்த வானம்' என டைட்டில் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. செம ஸ்டைலிஷாக படம் எடுத்தாலும் டைட்டிலை மட்டும் நல்ல தமிழில் வைத்துவிடுகிறார் மணிரத்னம் என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Vijay Sethupathi, Simbu, Fahad fasil, Aishwarya Rajesh, Jyothika, Aravind Swamy, Arun Vijay and Aditi Rao are starring in Mani Ratnam's new movie. Mani Ratnam's new film titled as 'Chekka Chivantha Vaanam'. An official title announcement has been released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil