Mari Selvaraj: 'ரொம்ப முக்கியம்' பைசன் பார்த்ததும் மணி ரத்னம் கொடுத்த ரியாக்‌ஷன்.. மாரி செல்வராஜ் ஷேரிங்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்திற்கு பலதரப்பட்ட தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர் மணிரத்னம் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதை மாரி செல்வராஜ் பகிர்ந்து, நன்றி தெரிவித்துள்ளார்.

பைசன் படம் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால், மதன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு அட்டகாசமாக இசையமைத்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள், விமர்சகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் படத்தைப் பாராட்டினர். ஹரி நாடார் போன்ற சிலர் மட்டுமே படத்தை எதிர்த்தார்கள், அதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களையும் அவர் எதிர் கொண்டார்.

Maniratnam Appriceates Mari Selvaraj Bison Movie He Shares On Social

மாரி செல்வராஜ் கோபம்: படத்தின் வெற்றி விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது மாரி செல்வராஜ் பேசும் போது கூட தனது படங்களை சாதிய மோதல்களை உருவாக்கும் படங்களாக உள்ளது என்று பத்திரிகையாளர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் காட்டமான பதில் அளிப்பது போல பேசி இருந்தார். மாரி செல்வராஜ் இது தொடர்பாக பேசியது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

Maniratnam Appriceates Mari Selvaraj Bison Movie He Shares On Social

பாராட்டு: இந்நிலையில் பைசன் படத்தைப் பார்த்த இயக்குநர் மணிரத்னம் படத்தை பாராட்டியுள்ளார். அதாவது, " இப்போதுதான் நான் பைசன் படத்தைப் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்படியான படத்தைக் கொடுத்த நீங்கள் தான் உண்மையான பைசன். உங்களது படங்களைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. தொடர்ந்து இது போல படங்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய படங்களும் குரலும் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார். மணிரத்னம் பைசன் படம் பார்த்துவிட்டு பாராட்டியதை பகிர்ந்த மாரி செல்வராஜ், " பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வாத்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்" என்றும் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X