கமலுக்கும் சேர்த்து மன்னிப்புக்கேட்ட மணிரத்னம்.. ஒருவழியா வெளியே தலையை கட்டிய தக் லைஃப் இயக்குநர்!

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் வெளியான தக் லைஃப் திரைப்படம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை 50 கோடி வசூலை கூட தாண்டவில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக தமிழ் சினிமாவுக்கு மாறியுள்ளது. நடிகர் சூரியின் மாமன் திரைப்படத்தின் வசூலை கூட தக் லைஃப் திரைப்படம் தாண்டவில்லை என்கின்றனர்.

சமீபத்தில், வெளியான தனுஷின் குபேரா திரைப்படம் 3 நாட்களில் தக் லைஃப் படத்தின் லைஃப் டைம் வசூலை முந்திக் கொண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தக் லைஃப் படத்தின் புரமோஷனுக்காக கமல்ஹாசன், சிம்புவுடன் இணைந்து சுமார் 1 மாதத்துக்கும் மேலாக மணிரத்னம் பல்வேறு நகரங்களுக்கு புரமோஷனுக்கு சென்று வந்தார்.

Maniratnam asks apology to fans after Thug Life movie failed to entertain audience
Photo Credit:

ஆனால், படம் வெளியான பின்னர், வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு ஒட்டுமொத்த படக்குழுவும் மயான அமைதி காத்து வந்த நிலையில், படத்தின் தோல்விக்காக முதன்முறையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் இயக்குநர் மணிரத்னம்.

பிரபலங்களின் வாரிசுகள் தான் உதவி இயக்குநர்கள்: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர், நடிகர் ரஹ்மானின் மகள் அலீஷா ரஹ்மான் மற்றும் லப்பர் பந்து பட ஹீரோயின் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தான் உதவி இயக்குநர்களாக பணியாற்றினர். மணிரத்னம் சொன்ன விஷயங்களை மட்டுமே அவர்கள் கேட்டதாகவும், யாருமே இயக்குநருக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு இல்லாத நிலையில், தான் தக் லைஃப் திரைப்படம் திரைக்கதையிலேயே தடம் புரண்டு விட்டது என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

மன்னிப்புக்கேட்ட மணிரத்னம்: தக் லைஃப் திரைப்படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்தாலும், அதே போன்றதொரு படத்தைக் கொடுக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் வேறு மாதிரியான சோதனையை மேற்கொண்ட நிலையில், ரசிகர்கள் நாயகன் படத்தை போலவே எதிர்பார்த்த நிலையில் தான் அவர்களுக்கு ஏமாற்றம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நாங்கள் இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என கமலுக்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்டுள்ளார் மணிரத்னம்.

Maniratnam asks apology to fans after Thug Life movie failed to entertain audience
Photo Credit:

ரஜினிகாந்த் படம் டிராப்: தளபதி படத்துக்குப் பிறகு ரஜினிகாந்தை வைத்து மணிரத்னம் படம் இயக்காத நிலையில், தக் லைஃப் படத்தின் புரமோஷன் சமயத்தில், அடுத்து ரஜினிகாந்த் படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல்கள் பரவின. ஆனால், தக் லைஃப் படத்தின் ரிசல்ட்டை பார்த்து ரஜினிகாந்த் இப்போதைக்கு வேண்டாம் என மறுத்துவிட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் நடிப்பில் கூலி, ஜெயிலர் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஷங்கர் போலவே: தமிழ் சினிமாவில் ஏ.ஆர். முருகதாஸ், ஹரி, ஷங்கரை தொடர்ந்து மணிரத்னமும் அவுட்டேட்டட் இயக்குநர் வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளார். இன்றைய இளம் ரசிகர்களை கவரும் வகையில் வேகமான திரைக்கதையுடன் அட்டகாசமான படங்களை கொடுக்க தவறிவிட்டார் என்றும் கமல்ஹாசன், சிம்புவை வைத்து தரமான சம்பவத்தை மணிரத்னம் செய்திருந்தால், இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக அது அசால்ட்டாக மாறியிருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X