ஃப்ரெஞ்ச் பியர்ட் வள்ளுவர் மணிரத்னம்.. லெஜெண்ட் இயக்குநரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: மணிரத்னம் இந்திய சினிமாவின் ஆளுமைகளில் ஒருவர். நாடு முழுவதும் அவரது படங்களுக்கும், அவருக்கும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் அவர். இப்போது தக் லைஃப் படத்தை இயக்கிவரும் அவர் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதனை பார்த்த பலரும் வாய் பிளந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர்களில் மணிரத்னத்தின் பங்கு தவிர்க்கவே முடியாது. பாலுமகேந்திரா, மகேந்திரன் உள்ளிட்டோர் மௌனங்களை மொழியாக்கியவர்கள். மணிரத்னம் அந்த மௌன மொழியில் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே சேர்த்து அந்த மௌன மொழியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர்.

Maniratnam Birthday Tamil Cinema Kollywood

வசனம் சிறிதுதான் வீரியம் பெரிது: மணிரத்னத்தை ஃப்ரெஞ்ச் பியர்ட் வைத்த வள்ளுவர் என்று சொல்லலாம். ஒன்றரை அடியில் வள்ளுவர் எப்படி பல விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறாரோ அதுபோல் மணி சில வரிகளில் மாஸ் மேஜிக்கை நிகழ்த்திவிடுவார். அவரது ஒவ்வொரு காட்சியமைப்பும் சினிமா மீது காதல் கொண்டவர்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டுபோய் நிறுத்தும். நாயகன் படத்தில் கமல் பேசிய, நான் அடிச்சா நீ செத்துடுவ என்ற டயலாக்கிற்குள் அவ்வளவு மாஸ் இருக்கும்.

ஃப்ரெஷ் மணி; பகல் நிலவு படத்தின் மூலம் அறிமுகமாகி தோல்வியை சந்தித்தாலும் ஏதோ ஒன்று ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதே என்று ரசிகர்களை நினைக்க வைத்தவர். உண்மை கதைகளை எடுப்பதில் எப்போதுமே சிக்கல் என்று நினைத்த இயக்குநர்கள் மத்தியில் அதனை ரொம்பவே லாவகமாக செய்துகாட்டியவர் மணிரத்னம். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து அவர் உருவாக்கிய பம்பாய் படத்தை உதாரணமாக சொல்லலாம். மிகப்பெரிய சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட்டை காதலையும், எமோஷனையும் கலந்து கொடுத்திருப்பார்.

எப்போதும் மணி சார்தான்: இயக்குநர்களின் பெயர் அவர்களுக்கு பெரிய அடையாளத்தை கொடுக்கக்கூடியவை. பொதுவாக எந்த இயக்குநராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் மணிரத்னத்தை மட்டும்தான் மணி சார் என்று அழைப்பார்கள். அதற்கு காரணம் அவரது படங்கள் மட்டுமில்லை அவரது செயல்களும்தான். எப்போதும் அமைதிகொள்ளும் முகத்தை வைத்துக்கொண்டு சின்ன சிரிப்பை உதிர்த்துக்கொண்டு நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் என அடர்த்தியான கதைக்களங்களை எளிமையான உணர்வோடு ரசிகர்களுக்கு கொடுப்பது அவருக்கு மட்டுமே தெரிந்த மேஜிக்.

பொன்னியின் செல்வன்: பொதுவாக ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய வேலைதான். அதை வெற்றிமாறன் இப்போது தொடர்ச்சியாக செய்து எளிமைப்படுத்தியிருக்கிறார். அதேசமயம் மணிரத்னம் அதற்கான விதையை போடுவதில் எப்போதுமே ஆர்வமாக இருந்தவர். பொன்னியின் செல்வனை திரையில் பார்க்க முடியுமா என்று தமிழர்கள் ஏங்கிக்கொண்டிருக்க அதை எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்தும் சாத்தியமாக்கவில்லை. ஆனால் மணிரத்னம் அதனை சாத்தியமாக்கினார்.

மணிரத்னம் பிறந்தநாள்: இப்போது அவர் தக் லைஃப் படத்தை இயக்கிவருகிறார். ஏற்கனவே கமலும், மணிரத்னமும் இணைந்து நாயகன் என்ற கல்ட் கிளாசிக்கை கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அவருக்கு கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் அளவில் மொத்த சொத்து மதிப்பு இருக்கிறதாம். ஒரு படத்துக்கு அவர் 5 கோடி ரூபாய் அளவில் சம்பளமாக பெறுகிறார் என்றும்; சினிமாவில் சம்பாதிப்பதில் சரி பாதி பங்கை சினிமாவிலும், மீதியை மற்ற தொழில்களிலும் அவர் முதலீடு செய்துவருவதாக கூறப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் அவருக்கு பிரமாண்டமாக வீடு ஒன்று இருக்கிறது. அது கோடி கணக்கில் மதிப்புடையதாம். அதேபோல் அவரிடம் BMW, பென்ஸ் ஆகிய சொகுசு கார்களும் இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X