பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று… அடுத்த ஆண்டு திரைக்கு வரும்… அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது !

சென்னை : மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காட்டுப்பகுதியில் முடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று நாவல்

வரலாற்று நாவல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் வரலாற்று நாவலை திரைப்படமாக இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி,விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு ,ஜெயராம் என ஒரு நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக

ஆதித்த கரிகாலனாக

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இரண்டு வேடத்தில்

இரண்டு வேடத்தில்

ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி கதாபாத்திரத்திலும், த்ரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் இருவேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு வேடத்தில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

இரண்டு பாகங்களாக

இரண்டு பாகங்களாக

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விரைவில்

விரைவில்

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்போது வரை நடைபெறாமல் உள்ளது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு திரைக்கு வரும்

அடுத்த ஆண்டு திரைக்கு வரும்

இந்நிலையில், லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்த ஆண்டு வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் அப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X