Maniratnam on PS2: பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து மாறுபடுகிறதா படம்? மணிரத்னம் விளக்கம்!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 வெளியாகி ஒரு பக்கம் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சனி, ஞாயிறு மற்றும் மே 1ம் தேதியான திங்கள் வரை திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்ஃபுல் போர்டுகள் மாட்டி வருகின்றனர்.

ஆனால், இன்னொரு பக்கம் பொன்னியின் செல்வன் 2வுக்கு எதிரான விமர்சனங்களும் எக்கச்சக்கமாக குவிந்து வருகின்றன.

பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த பல விஷயங்களை மாற்றி ஏமாற்றி விட்டார் மணிரத்னம் என குற்றச்சாட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அதற்கான விளக்கத்தை இயக்குநர் மணிரத்னம் கொடுத்துள்ளார்.

Maniratnam gives clarification on Ponniyin Selvan 2 story and characters changes

70 ஆண்டுகால வாசிப்பு: அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை சுமார் 70 ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் வாசித்து வருகின்றனர். வீராணம் ஏரியை முதன் முதலில் வந்தியத்தேவன் பார்ப்பது தொடங்கி கடைசியாக சேந்தன் அமுதனுக்கு மணிமுடி கிடைப்பது வரை அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொண்டே பொன்னியின் செல்வன் படத்திற்காக பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்தனர்.

எம்ஜிஆர் முதல் ராஜமெளலி வரை பலரும் முயற்சித்தும் முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் கடைசியாக வெற்றிப் பெற்று ரசிகர்களுக்கு அந்த பிரம்மாண்ட காவியத்தை படமாக காட்டி விட்டார் மணிரத்னம். அவரது மிகப்பெரிய முயற்சிக்கு பலனாக முதல் பாகத்திற்கே 500 கோடி வசூலை அள்ளித் தந்த தமிழர்கள் அடுத்த பாகத்திற்கும் மிகப்பெரிய வசூலை வாரிக் கொடுக்க காத்திருக்கின்றனர்.

கனவை நனவாக்கிய மணிரத்னம்: இயக்குநர் மணிரத்னமே இந்த படத்தை இயக்க பல ஆண்டுகளாக கனவு கண்டு வந்தார். இந்த படத்தை இயக்க மல்டி ஸ்டாரர்களை வைத்து ஒரு ட்ரையல் பார்க்கவே செக்கச் சிவந்த வானம் படத்தையே இயக்கினார் மணிரத்னம்.

Maniratnam gives clarification on Ponniyin Selvan 2 story and characters changes

சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்டவர்களை வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு போடவே நினைத்திருந்த அவர், கடைசியில் அவர்கள் கால்ஷீட் காரணமாக எஸ்கேப் ஆக ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம் கூட்டணியில் இந்த படத்தை எடுத்துள்ளார்.

குந்தவை கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷை தேர்வு செய்ய நினைத்த நிலையில், அவரும் நோ சொல்ல அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றது. கொடுத்த கதாபாத்திரத்தை எந்தவொரு குறையுமின்றி நடித்து பொன்னியின் செல்வன் படத்தை தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாகவே மாற்றி உள்ளனர்.

ஏமாற்றிவிட்டாரா மணிரத்னம்?: பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கிறேன் என்கிற பெயரில் இயக்குநர் மணிரத்னம் நாவலுக்கும் அமரர் கல்கிக்குமே துரோகம் செய்து விட்டார் என பலரும் சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர்.

Maniratnam gives clarification on Ponniyin Selvan 2 story and characters changes

அந்த அளவுக்கு தரமான சம்பவத்தைத் தான் அவரும் படத்தில் செய்துள்ளார். நாவலை கரைத்துக் குடித்த ரசிகர்களுக்கே ட்விஸ்ட் வைக்கிறேன் என்கிற பெயரில் சில கதைகளையும் கதாபாத்திரத்தையும் மாற்றியமைத்த நிலையில், தான் ரசிகர்கள் பொளந்து கட்டி வருகின்றனர்.

மணிரத்னம் கொடுத்த அடடே விளக்கம்: விடுதலை படத்தை பார்த்த பலரும் வெற்றிமாறன் கதையை சிதைத்து விட்டார் என்றும் வரலாற்றை திரித்து விட்டார் என்றும் பொங்கினர். அதே போலத்தான் மணிரத்னத்தையும் பலர் விளாசி வருகின்றனர்.

இந்நிலையில், கல்கி நாவலுக்காக எழுதியதில் இருந்து எந்தவொரு ஆன்மாவும் போகாமல் பார்த்துக் கொண்டோம் என நினைக்கிறேன். மூலக் கதையை சரியாக முடிக்க வேண்டும் என்பதால் சில கிளைக் கதைகளை சொலல் முடியவில்லை. அல்லது மாற்ற வேண்டிய நிலை வந்து விட்டது. ஆனால், படமாக பொன்னியின் செல்வன் 2 யாரையும் ஏமாற்றாது என நம்புகிறேன் என சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

Maniratnam gives clarification on Ponniyin Selvan 2 story and characters changes

ஆனால், மணிரத்னத்தின் இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் அவர் செய்தது தவறு தான் என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் பறந்து வருகின்றன. கதையை மாற்ற வேண்டும் என் தாயின் ஒரு மார்பை அறுக்க வேண்டும் என்கிறீர்களா மணிரத்னம் என அவரது பட வசனத்தை வைத்தே ஓட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்த கதையை படமாக உருவாக்க அவர் போட்டுள்ள மெனக்கெடலை மறந்துவிடக் கூடாது என மணிரத்னத்தின் ரசிகர்களும் படத்திற்கு தங்களின் மிகப்பெரிய ஆதரவை வழங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X