மணிரத்னம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!
சென்னை : மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, ஜோதிகா, சிம்பு, ஃபகத் பாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் ஒன்றாக இப்படத்தில் இணைகிறார்கள்.
சிம்பு, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உட்பட பலருக்கு இந்தப் படம் தான் மணிரத்னம் இயக்கத்தில் முதல் படம்.
இந்தப் படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் திரையுலகில் கசிந்திருக்கின்றன. இதுபற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும்.

அப்பாவாக பிரகாஷ் ராஜ்
இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, ஃபகத் பாசில் ஆகிய மூவருக்கும் அப்பாவாக பிரகாஷ் ராஜும் அம்மாவாக ஜெயசுதாவும் நடிக்கிறார்களாம். அரவிந்த் சாமிக்கும் அப்பாவாக நடிக்கவிருப்பதால் பிரகாஷ் கொஞ்சம் வயதானவரைப் போல கெட்டப் போடவிருப்பது தெளிவாகிறது.

போலீஸாக விஜய் சேதுபதி
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளாராம். விஜய் சேதுபதி போலீஸாக நடித்த 'சேதுபதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மணிரத்னம் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் போலீஸ் கேரக்டர் பேசப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு
இயக்குநர் மணிரத்னமே தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். இதற்கான ப்ரீபுரொடக்ஷன் வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறதாம்.

இசைக்கோர்ப்பு பணிகள் தொடக்கம்
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல்கள் கம்போஸிங் வேலையை ரஹ்மான் கோவாவில் துவக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரியில் ஷூட்டிங்
வரும் 2018 ஜனவரியில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். மணிரத்னம் படங்களின் டைட்டில் அதிகமாகப் பேசப்படும். அதனால் படத்தின் டைட்டில் எப்போது வெளிவரும் என்பதுதான் மணிரத்னம் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











