மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி?
கைதி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகர் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில், ராஜு முருகன் படத்திலும் கார்த்தி நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

பிகிலுடன் போட்டி
கார்த்தி நடித்துள்ள கைதி படம் வரும் வெள்ளிக்கிழமை தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. அன்றைய தினம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் ரிலீசாகிறது.
கடந்த தீபாவளியன்று விஜய்யின் சர்கார் படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே., திரைப்படங்கள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த போட்டி தவிர்க்கப்பட்டன மெர்சல் படமும் எந்தவொரு போட்டியும் இல்லாமல் தான் வெளியானது.
ஆனால், இந்த தீபாவளிக்கு பிகிலுக்கு சரியான போட்டியாக கார்த்தியின் கைதி படம் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.

கைவசம் நிறைய
கைதி ரிலீசுக்காக காத்திருக்கிறார் நடிகர் கார்த்தி. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக நீண்ட நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால், இதுவரை அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதுபோல கார்த்தியின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

அண்ணியுடன் ஒரு படம்
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படத்தில் முக்கியமான ரோலில் முதன்முறையாக அண்ணியுடன் சேர்ந்து நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

மணிரத்னமா? ராஜு முருகனா?
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்காக சுமார் 8 மாத கால்ஷீட் தர கார்த்தி ஓகே சொல்லியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கார்த்தி முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப்ஸி எப்போது?
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம், ரிலீசுக்காக காத்திருக்கிறது. வரும் நவம்பர் மாதம் நிச்சயமாக ஜிப்ஸி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ஸியின் ரிலீசுக்கு பிறகு கார்த்தி படம் குறித்த அறிவிப்பை ராஜு முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











