சத்குருவுடன் கோல்ப் ஆடிய மணிரத்னம்: அப்டேட் கொடுத்த சுஹாசினி

By Siva

ன்னை: இன்று காலை மணிரத்னம் சத்குருவுடன் சேர்ந்து கோல்ப் ஆடியதாக சுஹாசினி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேசப்பட்டது.

வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக தான் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மறுநாளே மணிரத்னம் வீடு திரும்பினார்.

மணிரத்னம்

மணிரத்னம் வீடு திரும்பியதில் இருந்து அவரை பற்றிய தகவல்களை அவரின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். மணிரத்னம் சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டுவிட்டு தெம்பாக வேலைக்கு கிளம்பியதாக தெரிவித்தார் சுஹாசினி. இந்நிலையில் மணிரத்னம் இன்று காலை சத்குருவுடன் சேர்ந்து கோல்ப் ஆடியதாக ட்வீட் செய்துள்ளார் சுஹாசினி. சுஹாசினியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், மேடம் அப்படியே புகைப்படம் இருந்தால் வெளியிடுங்க ப்ளீஸ் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் வேலையில் இறங்கியுள்ளார் மணிரத்னம். அந்த ஸ்க்ரிப்ட் தொடர்பான பணிகளில் தான் அவர் பிசியாக உள்ளாராம். பெரும் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக படத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் போன்ற ஒரு அருமையான நாவலை படமாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது மணிரத்னத்திற்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் தனது கனவு படத்தை எடுத்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள்

மணிரத்னம் விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அவர் இத்துடன் நான்கு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

கோரிக்கை

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை துவங்குவதற்கு முன்பே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மணி சார், பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்காமல் இருப்பது தான் நல்லது. உங்களை குறை சொல்கிறோம் என்று நினைக்க வேண்டாம், அந்த நாவலை திரையில் காட்ட முடியாது. அதை நாவலாகவே விட்டுவிடுங்கள். மேலும் நீங்கள் தேர்வு செய்துள்ள சில நடிகர்கள், நடிகைகள் சரிபட்டு வரமாட்டார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X