மணிரத்னம் பாய்ஸால் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது: சித்தார்த்
Recommended Video

சென்னை: மணிரத்னத்திடம் பயிற்சி எடுத்த இரண்டு பேரால் நான்சென்ஸ் படத்தை எடுக்க முடியாது என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்துள்ள ஹாரர் படம் அவள். இந்த படத்தை பார்த்து இந்தியாவே நிச்சயம் பயப்படும். அந்த அளவுக்கு படம் மிரட்டலாக வந்துள்ளது என்கிறார் சித்தார்த்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

அம்மா
ஒரு நல்ல ஹாரர் படம் பார்ப்பது ஸ்பா செல்வது போன்று ஆகும். ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். 5 வயதில் என் அம்மா படங்களை அறிமுகப்படுத்தினார். 10 வயதில் ஹாரர் படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஸ்க்ரிப்ட்
நானும், மிலிந்தும் சேர்ந்து அவள் ஸ்க்ரிப்ட்டை எழுதி முடிக்க 4 ஆண்டுகள் ஆனது. படம் படுமிரட்டலாக இருக்கும். படத்தில் ஒரு ஜோக் கூட கிடையாது.

போதை
பயப்படுவது கூட போதை போன்று தான். எனக்கு பயப்பட பிடிக்கும். ரசிகர்களும் படம் பார்த்த பிறகு என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். மணிரத்னத்திடம் பயிற்சி எடுத்த நானும், மிலிந்தும் நான்சென்ஸ் படம் எடுக்க முடியாது.

சிறுமி
இது உண்மை கதையை மையமாகக் கொண்டு கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ள படம். இமாச்சல பிரதேசத்தில் படமாக்கினோம். ஒரு தம்பதியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சிறுமியை பற்றிய கதை என்கிறார் சித்தார்த்.


Click it and Unblock the Notifications











