PS2 :பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல்.. 8 நாட்கள் முடிவில் இவ்வளவா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பொன்னியின் செல்வன் 2 படம்.

இந்தப் படத்தின் முதல் பாகம் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்காக படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களை மேற்கொண்டனர். இந்த பிரமோஷன்கள் படத்தின் வெற்றிக்கும் துணை நின்றது.

Maniratnams Ponniyin selvan 2 movie box office report in the past 8 days

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்ஸ் : மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது பொன்னியின் செல்வன் 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வரலாற்றுப் பின்னணியில் வெளியாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் வசூலையும் குவித்தது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

ரசிகர்களை அதிகமாக காத்திருக்க வைக்காமல் கடந்த மாதம் 28ம் தேதி இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. முதல் பாகம் அளவிற்கு இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவரத்தவறிவிட்டதாக தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்திற்கு முன்னதாக படத்தின் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா, ஜெயராம் உள்ளிட்டவர்கள் அதிகமான பிரமோஷன்களை செய்தனர். பிரமோஷனல் டூரும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 8 நாட்களை கடந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் படத்தின் வசூல் தற்போது 255 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 93 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. படம் ரிலீசாகி 4 நாட்கள் தொடர்ந்து சிறப்பான வசூலை பெற்றது. தொடர்ந்து கடந்த 2ம் தேதி முதல் இந்தப் படத்தின் வசூல் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. இந்நிலையில் நேற்று முதல் படத்தின் வசூல் மீண்டும் அதிரிக்கத் துவங்கியுள்ளது.

Maniratnams Ponniyin selvan 2 movie box office report in the past 8 days

தற்போது வாரயிறுதியில் படம் உள்ளதால், படத்தின் வசூல் இந்த வார இறுதியில் 300 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலில்லாமல் இரண்டாவது பாகத்தில் குந்தவை -வந்தியத்தேவன் மற்றும் ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினி கேரக்டர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து இந்தப் படத்தின் ரசிகர்களும் அதிகரித்தே காணப்படுகின்றனர். படம் பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு வெளிவந்திருந்தால் மேலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கும் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களை தொடர்ந்து படக்குழுவினர் செய்து வருகின்றனர். அடுத்தடுத்த பிரமோஷன் வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X