தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ்? விஜய்யுடன் மோதுகிறதா?
சென்னை : நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியானது பொன்னியின் செல்வன் படம்.
இந்தப்படம் மிகச்சிறந்த விமர்சனங்களை மட்டுமில்லாமல் சிறந்த வசூலையும் சர்வதேச அளவில் குவித்தது.
இதனிடையே வரும் ஏப்ரல் 28ம் தேதி படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது பொன்னியின் செல்வன் படம். எழுத்தாளர் கல்கியின் எழுத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம்.

மணிரத்னம் கனவு ப்ராஜெக்ட்
தனது கனவு ப்ராஜெக்டான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து அவர் தயாரித்திருந்தார். முதல் பாகத்தின் வெளியீட்டின்போதே, இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 28ல் ரிலீஸ் அறிவிப்பு
வரும் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிஜி வேலைகள் தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி, ஜெயம்ரவி கேரக்டரின் காதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விஜய் படத்துடன் மோதும் பொன்னியின் செல்வன் 2?
இதனிடையே தற்போது படத்தின் சிஜி வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் அக்டோர் 19ம் தேதி விஜய்யின் லியோ படத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 67 படம்
விஜய்யின் தளபதி 67 படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் தற்போது காஷ்மீரில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் ப்ரமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ரிலீஸ் தேதியுடன் வெளியானது. இந்நிலையில், கடந்த ஆண்டில் மிகச்சிறந்த வசூலை குவித்த பொன்னியின் செல்வன் படம் விஜய் படத்துடன் மோதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











