Don't Miss!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- News
"ஒரிஜினாலிட்டி திமுக".. அவருக்கு ராசியும் இல்லை.. இஷ்டமும் இல்லை.. நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு
- Finance
பாகிஸ்தானின் மோசமான நிதிநிலை.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்..அமைச்சர்களுக்கு சலுகை கட்..!
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தமிழர்களின் பாரம்பரிய உடையை மணிரத்னம் மதிக்கவில்லை.. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த ப்ளூசட்டை மாறன்!
சென்னை: சோழர்களின் கொடியில் காவிக் கொடி இருப்பதாக மணிரத்னமுடன் பஞ்சாயத்தை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் வரை மணிரத்னத்தை விடக் கூடாது என அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளார்.
பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களை விட குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்கும் நக்கீரர் போல மாறி விட்டாரா ப்ளூ சட்டை மாறன் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பக்கத்து ஸ்டேட் பாகுபலி படத்தில் பனிப்பாறை இடிந்து விழும் காட்சிகளின் சிஜி குறையை கண்டு கொள்ளாமல் தமிழ் ரசிகர்கள் படத்தின் கதைக்கும் நடிகர்களின் நடிப்புக்கும் தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், தேவையில்லாமல் நம் மண்ணின் பொன்னியின் செல்வனுக்கு ஏன் இத்தனை வன்மம் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
என்னது...விக்ரம் பான் இந்தியா ஹிட் கிடையாதா...ப்ளூசட்டை மாறனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

மாபெரும் புறக்கணிப்பு
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் 30 பேருமே அதன் பிள்ளையார் சுழியான டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் போனதே மாபெரும் புறக்கணிப்பாக மாறி உள்ளது. மணிரத்னம் சரியாக அழைக்கவில்லையா? அல்லது ஆளுக்கொரு காரணத்தை சொல்லி நடிகர்களும், மற்ற முக்கிய பிரபலங்களும் பங்கேற்கவில்லையா? என்பது தெரியவில்லை. போஸ்டர்களை குறை சொல்லி வந்தவர்கள் டீசரை பார்த்து அதிர்ந்து போன நிலையில், சிஜி சரியில்லை, டிஐ சரியில்லை என சப்பைக் கட்டு கட்ட ஆரம்பித்துள்ளனர்.

திரைக்கதை நல்லா இருந்தா
ஒரே வீட்டில் சீரியல் போல எடுக்கப்பட்ட விசு படத்தை இன்னமும் ரசிகர்கள் வியந்து பார்த்துத் தான் வருகின்றனர். கதையும், நடிகர்களின் நடிப்பும் நச்சென இருந்தால் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதால் தான் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக நம்ம ஊர் படங்களின் தரம் இல்லை என்றாலும் வார வாரம் வெளியாகும் படங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். சிஜி, ஆக்ஷன் எல்லாம் இருந்தும் ரஜினி, விஜய், அஜித் நடித்தும் திரைக்கதை சரியில்லை என்றால், ரசிகர்கள் எப்படி ட்ரோல் செய்வார்கள் என்பதை சமீபத்தில் அதிகமாகவே பார்த்து விட்டோம்.

காவி பிரச்சனை
சோழன் வருகிறான் என்கிற கொடியை பார்த்த உடனே காவிக் கொடி என்றும் வலது சாரி சிந்தனையுடையவர் மணிரத்னம் என்று அவரை ஆர்எஸ்எஸ் அமைப்புடனே ஒப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்திருந்தார். ஆனால், டீசர் ரிலீசுக்கு பிறகு அந்த சத்தம் அப்படியே அடங்கிய நிலையில், தற்போது டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அணிந்து வந்த உடையை வைத்து அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளார்.
Recommended Video

மணிரத்னம் ஆர்டரா
தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து வரக் கூடாது என இயக்குநர் மணிரத்னம் கோரிக்கை விடுத்தாரா அல்லது ஆர்டர் போட்டாரா? ஏன் யாருமே வேட்டி அணிந்து டீசர் வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை என்கிற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பி உள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் வழக்கம் போல திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சேலை கண்ணுக்குத் தெரியலையா
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவிற்கு நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்ததை பற்றிக் குறிப்பிடாமல் ஹீரோக்கள் வேட்டி அணிந்து வரவில்லை என்பதை மட்டுமே குற்றம் கண்டுபிடித்து தற்போது போடக் காரணம் என்ன? தமிழர்களின் பாரம்பரியம் பிரச்சனை இல்லை, மணிரத்னத்தை வம்பிழுக்கணும் அதுதான் உங்க குறிக்கோள் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.