லீக்கான ஐஸ்வர்யா ராய்யின் ஃபோட்டோ... கடுப்பான மணிரத்னம் செய்தது என்ன?

சென்னை : டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் வரலாற்று படமாக பொன்னியின் செல்வன் இருந்து வருகிறது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது.

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 5 பாகங்களாக வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலை, 2 பாகங்களாக சினிமாவாக எடுக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார். இதற்கு முன் பலர் முயன்றும் இந்த கதையை சினிமாவாக எடுக்க முடியவில்லை.

பெரிய பட்ஜெட் தமிழ் படம்

பெரிய பட்ஜெட் தமிழ் படம்

தமிழில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பொருட் செலவில் எடுக்கப்படும் படமாக பொன்னியின் செல்வன் இருந்து வருகிறது. இரண்டு பாகங்களையும் அடுத்த ஆண்டில் சில மாத இடைவெளியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இரண்டு பாகங்களும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

லீக்கான ஐஸ்வர்யா ராய் ஃபோட்டோஸ்

லீக்கான ஐஸ்வர்யா ராய் ஃபோட்டோஸ்

இதனால் இந்த படம் பற்றிய அப்டேட் வராதா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் இணையத்தில் கசிந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி, வைரலாக்கினர்.

பூங்குழலியாக ஐஸ்வர்யா

பூங்குழலியாக ஐஸ்வர்யா

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், உத்தம சோழனின் மனைவி பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறாராம். இதற்காக மகாராணியை போன்று சிவப்பு நிற புடவையில் கெத்தான கெட்அப்பில் இருக்கும் ஃபோட்டோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த ஃபோட்டோ வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அப்செட்டான மணிரத்னம்

அப்செட்டான மணிரத்னம்

மணிரத்னம் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். இதனால் இனி ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மணிரத்னம் இந்த விவகாரத்தில் மிகவும் கடுமை காட்டும் முடிவில் இருக்கிறாராம்.

த்ரிஷாவும் பகிர்ந்தாரே

த்ரிஷாவும் பகிர்ந்தாரே

பொன்னியின் செல்வன் ஷுட்டிங் தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் ஷுட்டிங் நடக்கும் பிரம்மாண்ட அரண்மனையின் ஃபோட்டோவை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டினார். இந்த ஃபோட்டோக்கள் செம வைரலாகின.

ஐஸ்வர்யா ராய் வில்லியா

ஐஸ்வர்யா ராய் வில்லியா

பொன்னியின் செல்வன் ஷுட்டிங் துவங்கியது முதலே இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளில் கேரக்டர்கள் உள்ளிட்டவைகள் குறித்து அடிக்கடி ஏதாவது ஒரு தகவல் வெளி வந்து கொண்டு தான் உள்ளது. இதற்கு முன்பு கூட ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில், நந்தினி, மந்தாகினி கேரக்டர்களில் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று வில்லி கேரக்டர் எனவும், சரத்குமாரின் மனைவி ரோலில் தான் அவர் நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது.

வெளியான கேரக்டர்கள்

வெளியான கேரக்டர்கள்

அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் என ஒரு பட்டியல் வெளியானது. பிறகு யாரெல்லாம், எந்த கேரக்டரில் நடிக்கிறார்கள் என பெரிய பட்டியலே வெளியிடப்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் படக்குழு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோவே வெளியானதால், இதனை எப்படி தடுப்பது என்ற ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்

அடுத்த ஆண்டு ரிலீஸ்

அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X