»   »  மணிரத்னம் பட நாயகியின் தற்போதைய பரிதாப நிலை.. ரசிகர்கள் ஷாக்!

மணிரத்னம் பட நாயகியின் தற்போதைய பரிதாப நிலை.. ரசிகர்கள் ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மணிரத்னம் பட ஹீரோயினின் தற்போதைய நிலை

மும்பை : மணிரத்னம் இயக்கிய 'திருடா திருடா' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அனு அகர்வால். 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' பாடலில் வருபவர் இவர்தான்.

பிரசாந்த், ஆனந்த் ஆகியோர் நடித்த அந்தப் படத்தில் நடிகை அனு அகர்வால், சந்திரலேகா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

49 வயதை எட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் அனு அகவாலின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருடா திருடா

திருடா திருடா

மணிரத்னம் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான படம் 'திருடா திருடா'. இந்தப் படத்தில் ஆனந்த், பிரசாந்த், ஹீரா ராஜ்கோபால், அனு அகர்வால் உட்பட பலர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிகை அனு அகர்வால், சந்திரலேகா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அனு அகர்வால்

அனு அகர்வால்

அந்த படத்திற்கு முன்பு நடிகை அனு அகர்வால் 1988-ம் ஆண்டில் 'இஸி பனா' என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர் 1990-ல் வெளியாகி ஹிட்டான 'ஆஷிக்கி' படம் மூலம் பாலிவுட்டில் பல படங்களில் காதநாயகியாக நடித்து வந்தார். 'ஆஷிக்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் ஷ்ரத்தா கபூர் நடித்தார்.

தனியாக

தனியாக

தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அனு கோமாவால் பாதிக்கப்பட்டு 29 நாட்கள் சுயநினைவு இல்லாமல் பீகார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். 49 வயதை எட்டிய இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

சுயசரிதை

சுயசரிதை

இவர் தனது வாழ்க்கையை 'Unusual' என்கிற தலைப்பில் சுயசரிதையாகவும் எழுதியுள்ளார். தன் வாழ்க்கையில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவங்கள் பலவற்றை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளாராம்.

தற்போதைய நிலை

தற்போதைய நிலை

சினிமாவில் ஏற்ற இறக்கங்களையும், வாழ்வில் பல அடிகளையும் அனுபவித்த அனு அகர்வால் ஆளே முழுவதுமாக மாறிப்போய் இருக்கிறார். அனுவின் தற்போதைய நிலை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
Anu Agarwal acted in 'Thiruda Thiruda' movie directed by Mani Ratnam. Anu Agarwal's current photo is released on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X