twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னம், ஷங்கரின் கூட்டு முயற்சி; இத்தனை இயக்குநர்கள் இணைந்து தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்!

    |

    சென்னை: தனியாக இயக்குநர் மணிரத்னமும் இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், இருவரும் இன்னும் சில முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.

    Rain on Films எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பல சிறு முதலீட்டு படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திரௌபதியை விட பெரிய சம்பவம் இருக்கும் போல.. ருத்ரதாண்டவம் ட்ரெயிலர்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்! திரௌபதியை விட பெரிய சம்பவம் இருக்கும் போல.. ருத்ரதாண்டவம் ட்ரெயிலர்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்!

    இந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், லிங்குசாமி, மிஸ்கின், சசி, வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் ஒன்றிணைந்து புதிய படங்களை தயாரிக்க உள்ளனர்.

    நடிகர்களும் இயக்குநர்களும்

    நடிகர்களும் இயக்குநர்களும்

    தயாரிப்பாளர்கள் மட்டுமே பெரும் பணத்தை போட்டு படங்களை தயாரித்து வந்த நிலையில், அந்த பிசினஸை அறிந்து கொண்ட இயக்குநர்களும் நடிகர்களும் தனித் தனியாக ஏகப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி சிறு பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை தயாரித்து வருகின்றனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ்

    மெட்ராஸ் டாக்கீஸ்

    இயக்குநர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார். தான் இயக்கும் படங்களை தானே தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார். தன்னுடைய உதவி இயக்குநர்கள் சிலர் படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

    எஸ் பிக்சர்ஸ்

    எஸ் பிக்சர்ஸ்

    இயக்குநர் ஷங்கரும் எஸ் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தன்னுடைய சிஷ்யர்களை இயக்குநர்களாக மாற்றி அழகுப் பார்த்தார். இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட சில படங்களை எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர் தயாரித்து இருந்தார்.

    ஒன்றாக இணைந்து

    ஒன்றாக இணைந்து

    இயக்குநர் ஷங்கர் மற்றும் மணிரத்னத்தை போல மேலும் பல இயக்குநர்களும் தனித் தனியே தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டு முயற்சியாக ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

    ரெயின் ஆன் பிலிம்ஸ்

    ரெயின் ஆன் பிலிம்ஸ்

    ரெயின் ஆன் பிலிம்ஸ் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், லிங்குசாமி, மிஸ்கின், சசி, வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் ஒன்றிணைந்து புதிய படங்களை தயாரிக்க உள்ளனர்.

    முதல் படம் யாருடையது

    முதல் படம் யாருடையது

    இத்தனை இயக்குநர்கள் ஒன்றிணைந்து தயாரிக்கவுள்ள முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

    யாரோட ஐடியா

    யாரோட ஐடியா

    தனித் தனியாக இயக்குநர்கள் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் அவர்களால் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க முடியவில்லை என்றும், ஏகப்பட்ட இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்களுடனே மோதல் வெடித்து வருவதால், படம் எடுப்பதில் சிக்கல்கள் முளைத்து வருவதால் இப்படியொரு ஐடியாவை இயக்குநர் ஷங்கர் மற்றும் மணிரத்னம் இணைந்து உருவாக்கி இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜின் பங்கு இதில் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தனது பிறந்தநாளை பல ஜாம்பவான் இயக்குநர்களுடன் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி இருந்த நிலையில், அத்தனை இயக்குநர்களும் இணைந்து இப்படியொரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இருப்பது ரசிகர்களுக்கும் திரைத் துறையினருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    Maniratnam, Shankar and other top directors started a new production house called Rain on Films. First maiden film will be directed by Lokesh Kanagaraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X