விஜய் அஜித்துன்னு சண்டை போடுறதெல்லாம் விஷம் தான்.. சோஷியல் மீடியா ஃபைட்.. மணிரத்னம் குட்டு!

சென்னை: இயக்குநர்களுக்கான ரவுண்டேபிள் கான்ஃபிரன்ஸ் நிகழ்ச்சி பிரபல யூடியூப் சேனலில் நடைபெற்ற நிலையில், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பல இயக்குநர்கள் அதில் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

சோஷியல் மீடியாவில் நடைபெறும் சண்டைகள் மற்றும் அதில் பரப்பப்படும் ஹேட்ரட் தொடர்பாகத்தான் இயக்குநர்கள் அதில் ஒரு டாப்பிக்காக எடுத்து விவாதம் செய்துள்ளனர்.

அதில், குறிப்பாக விஜய் - அஜித் என ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வதும், பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களுக்காக அடித்துக் கொள்வதும் சரியான அணுகுமுறையா? என மணிரத்னம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Maniratnam slams fans fight for Vijay vs Ajith and Box Office collection

விஷத்தை மட்டும் தான் கக்குறான்: சமூக வலைதளங்களை இளைஞர்கள் தங்களை ஆள்பவர்களுக்கு எதிராக தினமும் கேள்வி கேட்க ஒன்று திரண்டு பயன்படுத்தினால் பல நல்லது நடக்கும் என்றும் அதை விடுத்து விட்டு நடிகர்களை பற்றி பேசுவதும், நடிகர்களுக்காக சண்டை போட்டுக் கொள்ளும் இடமாக அதனை மாற்றி வைத்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் பேசும் போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் venom (விஷம்) மட்டும் தான் கக்குறான் என குறிப்பிட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் பத்தி பேசல: திருநெல்வேலி, நாகர்கோயிலில் படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பற்றி பேசல, படம் நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு மட்டும் தான் பேசுறாங்கன்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியுது. அது நல்லா இருக்கு.. ஆனால், தெருவுல இறங்கி சண்டை போடுறது மாதிரி கேவலமா சண்டை போடுறது தேவையில்லாத ஆணி என நறுக்கென பேசியுள்ளார்.

அஜித் - விஜய் சண்டை: மேலும், அஜித் பிடிக்கும் என்றும் விஜய் பிடிக்கும் என்றும் ஆரோக்கியமே இல்லாமல் படு மோசமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் சண்டை போட்டுக் கொள்வது எல்லாம் நல்லாவா இருக்கு என மணிரத்னம் கேள்வி எழுப்பி உள்ளார். ரசிகர்களை நடிகர்கள் தான் சோஷியல் மீடியா சண்டை போட தூண்டுகின்றனர் என்றும் அவர்கள் தங்கள் மார்க்கெட்டை உருவாக்க நினைத்து நண்பர்களாக வெளிப்படையாகவும் படங்களில் இணைந்து நடித்தும் வந்தால் இந்த பிரச்சனையே இருக்காது என்றும் திரைப்படங்களிலேயே அடி தடி சண்டையை இயக்குநர்கள் ஊக்கு விப்பது எல்லாம் என்ன மாதிரியான விஷத்தை சமூகத்தின் மீதும் இளைஞர்கள் மத்தியில் விதைக்கின்றனர் என்பதை புரிந்து செயல்பட்டால் தானே ரசிகர்களும் மாறுவார்கள் என நெட்டிசன்கள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X