’காவிக் கொடியை பறக்கவிட்டாரா மணிரத்னம்’.. ப்ளூ சட்டை மாறன் அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டாரு!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது.
Recommended Video
இந்த வாரம் முழுக்க ஏகப்பட்ட பொன்னியின் செல்வன் அப்டேட் வரப் போகிறது என்கிற அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து காவிக் கொடியை பறக்கவிட்டு இருக்கிறார் மணிரத்னம். அவர் ஒரு வலதுசாரி/ ஆர்.எஸ்.எஸ் எனது தனது வெறுப்புணர்ச்சியை இப்பவே விதைக்க ஆரம்பித்து விட்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்த வாரம் மணிரத்னம்
வார வாரம் சினிமா இயக்குநர்களுடனும் நடிகர்களுடனும் சண்டை போடுவதையே வேலையாக மாற்றி விட்டார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அஜித், விஜய், சூர்யாவை வம்பிழுத்து முடித்த நிலையில், சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி, சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதியை வம்பிழுத்தார். இந்நிலையில், இந்த வாரம் புதிய வரவாக இயக்குநர் மணிரத்னத்தை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ஆரம்பத்தில் இருந்தே தனது பல விமர்சனங்களில் மணிரத்னத்தை பல முறை இவர் ட்ரோல் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் அறிவிப்பு
பொன்னியின் செல்வன் படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்புடன் நேற்று ஒரு மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், வருகிறான் சோழன் என்கிற வாசகத்துடன் கொடி ஒன்று ஒய்யாரமாக பறக்க, அதற்கு கீழ் ஆதித்த கரிகலானாக விக்ரம் உள்ளிட்ட சில வீரர்கள் நிற்கும் காட்சி சில் அவுட்டில் இடம்பெற்றிருந்தது.

காவிக் கொடி
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் காவிக் கலர் பேனரை கிழித்து விட்டு வரும் காட்சியை போட்டு, பாஜகவுக்கு எதிரான காட்சி என பதிவிட்ட அதே ப்ளூ சட்டை மாறன், தற்போது இயக்குநர் மணிரத்னம் காவிக் கொடியை பறக்கவிட்டு இருக்கிறார் என்கிற ட்வீட்டை போட்டு வம்பிழுத்திருக்கிறார். ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டுக்கு கீழ் அது செங்கொடியாக இருக்கக் கூடாதா? சரியாக தெரியாததற்கு முன்பாகவே ஏன் விஷத்தை விதைக்கிறீங்க என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பதிவிட்டு, வலது சாரி சிந்தனையையும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையையும் தனது பல படங்களில் இயக்குநர் மணிரத்னம் விதைத்துள்ளார். காவிக் கொடியை காட்டி மீண்டும் அதே வேலையை பொன்னியின் செல்வன் படத்தில் செய்யப் போகிறார் என மணிரத்னத்தை சீண்டி உள்ளார். படம் வரட்டும் பார்த்து விட்டு நல்லா இருக்கு, இல்லைன்னு விமர்சிக்கலாம். அதை விட்டு ஆரம்பத்திலேயே நெகட்டிவிட்டியை பரப்பும் உங்கள் கேவலமான புத்தியை விட்டு விடுங்கள் என பலரும் அறிவுரை வழங்கியும் அசிங்கமாக திட்டியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











