Arjun: பொன்னியின் செல்வன் நடிகருக்கு நிச்சயதார்த்தம்.. நிச்சய மோதிரத்துடன் க்யூட் போஸ் கொடுத்த ஜோடி!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் மிக சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அவர்களின் காஸ்டியூமையும் மிகவும் கவனத்துடன் மேற்கொண்டு இருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அர்ஜுன் சிதம்பரம் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரது நிச்சயதார்த்தத்தை ஒட்டி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் படம்: இயக்குநர் மணிரத்னம் டைரக்ஷனில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகி மிக சிறப்பான விமர்சனங்களை பெற்றன. 2வது பாகத்தை காட்டிலும் இந்த படத்தின் முதல் பாகம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. வரவேற்பிலும் வசூலிலும் இந்த படம் மாஸ் காட்டியது. இதே கொண்டாட்டத்துடன் இதே எதிர்பார்ப்புடன் இரண்டாவது பாகமும் வெளியான நிலை அந்த படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து வேலை வாங்கியிருந்தார் இயக்குநர் மணிரத்னம்.
முன்னணி நடிகர்கள்: பெரியது முதல் சிறியது வரை ஒவ்வொரு கேரக்டருக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களின் காஸ்ட்யூமிலும் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அந்த கேரக்டர்களை பிரதிபலிக்கும் வகையில் காணப்பட்டனர். இந்தப் படத்தைப் பார்க்கும்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் அனுபவம் கிட்டியதா என்பது கேள்விக்குறிதான். ஆனால் இந்த படத்தின் காட்சி அமைப்புகளும் திரைக்கதையும் ரசிகர்களை சிறப்பாகவே கவர்ந்திருந்தது.
அர்ஜுன் சிதம்பரத்திற்கு நிச்சயதார்த்தம்: இந்நிலையில் இந்த படத்தில் வரகுணன் என்ற கேரக்டரில் நடித்திருந்த நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய நீண்ட நாள் காதலி ஜெயஸ்ரீ சந்திரசேகரனை அவர் நிச்சயம் செய்துள்ளார். விரைவில் இவர்களது திருமண தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது நிச்சயதார்த்த மோதிரத்துடன் இந்த ஜோடி க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
சக நடிகர்கள் வாழ்த்து: நடிகர் அர்ஜுன் முன்னதாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, அநீதி, விஜய் ஆண்டனியின் கொலை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்களது நிச்சயதார்த்த்தையொட்டி நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, சஞ்சனா நடராஜன், நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், அஸ்வின் காக்குமானு உள்ளிட்டவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











