சிகிச்சை முடிந்தது - வீடு திரும்பினார் மனீஷா கொய்ராலா
மும்பை: புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகை மனீஷா கொய்ராலா. சில வாரங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பம்பாய், முதல்வன், பாபா உள்ளிட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ரலா.
மனிஷாகொய்ரலாவுக்கு 2010-ல் திருமணம் நடந்தது. தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்.

பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்றனர்.
நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மனிஷா கொய்ராலா அனுமதிக்கப்பட்டார். அங்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
சிகிச்சைக்கு பிறகு மனிஷாகொய்ரலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இனி ஆபத்தில்லை என்பது உறுதியானதும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனாலும் அவர் இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார்.


Click it and Unblock the Notifications











